inner page header

HINDUISM AS IT IS

 

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

Home
உலக முடிவு 2012 இலா Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail

உலக முடிவு 2012 இலா?

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன்

www.knowingourroots.com

 

"அப்பெரும் புவிக்குத் தானோர் ஆயிரம் கோடி அண்டம்" என்று அன்றே கந்தபுராணம் எமது பூமி சார்பாகவே ஆயிரங்கோடி அண்டத்தொகுதிகளுக்கு மேல் உள்ளன என்று கூறியுள்ளது. இன்று  அண்டவியல் விஞ்ஞானமும் இதையே உறுதி செய்துள்ளது. இந்த அண்டத்தொகுதிகள் பெரு நாத வெடிப்பின் (cataclysmic explosion of Big Bang) ஊடாக வெடித்து இன்றும் விரிந்து கொண்டிருக்கின்றன என்று இன்றைய அண்டவியல் கூறுகின்றது. இதையே "அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பருந்தன்மை வளப்பெருங் காட்சி, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன" என்று மாணிக்கவாசகர் தமது திருவாசகத்தில் இவ்வாறு விரிவடைகின்ற அண்டத்தொகுதியின் காட்சியை விளக்குகின்றார். இந்த அண்டத்தொகுதி அதன் தோற்றத்தில் இருந்து இன்னமும் விரிவடைந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மை ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை விஞ்ஞானத்துக்கும் பிடிபடாமல் இருந்த ஒன்றாகும். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானியாகிய ஸ்டீவன் ஹோக்கிங்ஸ் இதை தமது ஆய்வுகளினூடாக இதை விளக்கும்வரை மாணிக்கவாசகரின் "நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன" என்ற வரிகளுக்கான சரியான விளக்கம் யாராலும் தரப்படவில்லை.

இவ்வாறு விரிவடைகின்ற அண்டத்தொகுதிகள் யாவும் அவற்றின் உள்ளிட்ட சடக்கோளங்களின் பிடி அதிகரிக்க, அதிகரிக்க அவற்றின் விரிவாக்கவிசை குறைந்து ஈற்றில் ஒடுங்கத்தொடங்கும். இவ்வாறு எல்லா அண்டத்தொகுதிகளும் கோடிக்கணக்கான ஆண்டுகளினூடாக நெருங்கிவந்து ஈற்றில் எங்கிருந்து முன்னர் வெளிப்பட்டுத் தோற்றியதோ அதே கருஞ்சுழியுள் (Black Hole) சென்று ஒடுங்குகின்றன. இதையே சிவஞான போதம் முதலாவது சூத்திரம் "தோற்றிய திதியே ஒடுங்கி மலத்து உளதாம்" என்று கூறியுள்ளது. இவ்வாறு உலகம் யாவும் ஒடுங்குவதையே மகாசங்காரம் அல்லது பேரூழிக்காலம் என்று சைவம் கூறும். இதன்போது இப்போது நாம் காணுகின்ற பௌதிக, இரசாயன, உயிரியல் விதிகள் மற்றும் செயற்பாடுகளின் இருமைத்தன்மையும் இல்லாமல் போய் ஒருமையிலே யாவும் ஒடுங்குகின்றன. இதையே பேரூழிக்காலத்தில் சத்தியும் சிவத்தில் ஒடுங்குவதாகச் சைவம் கூறுகின்றது. "இறுதியாம் காலந்தன்னில் ஒருவனே; இருவருந் தம் உறுதியில் நின்றார் என்னில் இறுதிதான் உண்டாகாதாம்; அறுதியில் அரனே எல்லாம்" என்று இதை சிவஞானசித்தியார் கூறுகின்றது.

இவ்வாறு ஒடுங்கிய அண்டத்தொகுதிகள் மீண்டும் பல்லாயிரக்கணக்கான வருடங்களின் பின்னர் அதே இடத்தில் இருந்து மீண்டும் இன்னொரு பெருநாத வெடிப்பினூடாக வெளிப்படும் என்று அண்டவியல் விஞ்ஞானம் இன்று கூறுகின்றது. இதையே ஒடுங்கிய இடத்தில் இருந்து மீண்டும் தோற்றும் என்று "அந்தமே ஆதி என்மானார் புலவர்" என்ற சிவஞானபோதம் முதலாம் சூத்திர வரிகள் கூறுகின்றன.

இந்தப் பேரண்டத்தொகுதியினுள்ளும் சிறு அண்டத்தொகுதிகள் இன்னமும் இவ்வாறான சிறிய பெருநாத வெடிப்புகளினூடாக இன்னமும் தோன்றிக்கொண்டுதான் இருக்கின்றன; இவ்வாறே சிறிய அண்டத்தொகுதிகள் கருஞ்சுழியில் ஒடுங்கி மறைந்துகொண்டே இருக்கின்றன என்று கூறும் இன்றைய அண்டவியல் இவற்றில் சிலவற்றை அவதானித்தும், பதிவு செய்தும் உள்ளது. கடவுள் என்றோ ஒரு நாள் உலகத்தையும் அதிலுள்ள உயிரினங்கள் மற்றும் பொருட்களையும் இன்றுள்ளவாறே படைத்துவிட்டு ஓய்ந்திருக்கின்றான் என்று சைவம் சொல்லுவதில்லை. கடவுள் சதாகாலமும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற பஞ்சகிருத்தியங்களையும் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருப்பதாகச் சைவசித்தாந்தம் கூறுவது இன்றைய விஞ்ஞானத்தின் அண்டவியல் தோற்ற, இருப்பு, ஒடுக்கக் கொள்கைகளுடனும் முரண்பாடுகள் ஏதுமின்றி நன்கு ஒத்திசைகின்றது.

கருஞ்சுழியுள் மறைந்த உலகத்துக்கு அங்கு என்ன நடக்கின்றது? அங்கே அது என்ன வடிவத்தில் இருக்கின்றது? என்று விஞ்ஞானத்தால் அறிய முடியவில்லை. ஆயினும் அங்கு ஒன்றுமே இல்லாமல் சூனியமாகப்போவதில்லை. கருஞ்சுழியுள் ஒடுங்குகின்ற அண்டத்தொகுதி அங்கு தூலமாக வெளிப்படையாக இல்லாமல் சூட்சுமமாக மறைந்துள்ளது என்று இன்றைய விஞ்ஞானம் விளக்கம் கொடுக்கின்றது. இந்த உலகத்தொகுதிக்கு வித்தாகிய மாயை ஒரு சூட்சுமமான உள்பொருள் என்றும், அதிலிருந்து தோன்றும் தூலமான இந்த உலகத்தொகுதிகள் யாவும் மீண்டும் அந்த சூட்சுமத்திலேயே ஒடுங்கியிருந்து மீண்டும் படைப்புக்காலத்தில்  தூலமாக வெளிப்படுகின்றன என்றும் சைவம் கூறுகின்றது. "நித்தமாய் அருவாய் ஏக நிலையதாய் உலகத்திற்கோர் வித்தாய் உள்ள மாயை" என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது. இதனாலேயே எந்த ஒரு சமயமும் கடவுளுக்குக் கூறாத மறைத்தல் என்ற தொழிலை கடவுளுக்கு வைத்துக் கண்டது சைவம்.

இவ்வாறு உலகங்களின் தோற்றம், இருப்பு, அவற்றின் ஒடுக்கம், மீண்டும் அவைகளின் தோற்றம், இவற்றின் கால எல்லைகள் பற்றிய உண்மைகள் யாவும் எமது சைவத்தின் அடிப்படை நூல்களான நான்கு வேதங்களிலும், இருபத்தெட்டு ஆகமங்களிலும், இருநூற்றேழு உப ஆகமங்களிலும், நூற்று எட்டு உபநிடதங்களிலும், பதினெட்டு புராணங்களிலும், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களிலும், தேவார, திருவாசகங்கள் உள்ளிட்ட பன்னிரு தமிழ்த் திருமுறைகளிலும், பதினான்கு சித்தாந்த சாத்திரங்களிலும், இவற்றின் வழிவந்த திருப்புகழ், தாயுமானார் பாடல்கள், பண்டார சாத்திரங்கள் போன்ற பல சார்பு மற்றும் வழி நூல்களிலும் மீண்டும் மீண்டும் காலம் காலமாகச் சொல்லப்பட்டு வருகின்றன. இவற்றின் சுருக்கத்தை யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் அவர்கள் தமது நான்காவது பாலபாடத்திலே மீண்டும் வழங்கியிருக்கிறார். இருந்தும் நாம் இவைகளையெல்லாம் பழமைவாதிகளின் நூல்கள் என்றும், மூட நம்பிக்கைகளின் திணிப்பு என்றும், காலத்துக்கு உதவாத, ஒவ்வாத கற்பனைக் குப்பைகள் என்றும், பௌராணிகர்களின் புழுகு மூட்டைகள் என்றும்,  ஆரியர்களின் திணிப்பு என்றும் பலவாறாகப் புறக்கணித்தும், இகழ்ந்தும், ஒதுக்கியும் வருவது எமது அறியாமையோ, அகந்தையோ அன்றேல் எமது இனத்தின் அழிவுக்கான அடையாளமோ யாம் அறியோம்.

 ஆயினும் சமீபத்தில் வெளிவந்த 2012 என்ற ஆங்கிலத்திரைப்படத்தின் பின்னர் உலக அழிவைப்பற்றி மாயன் நாகரிகத்தில் இருந்த அவர்களின் காலக்கணிப்பின் படி உலகம் 2012இல் அழியும் என்ற கருத்து பரவலாக கதைக்கப்படுகின்றது. இக்காலத்தில் இன்றைய விஞ்ஞானமே வியக்கும் அளவுக்கு இவ்வளவு அண்டவியல் உண்மைகளைத் தன்னுள் அடக்கியுள்ள எமது சைவம் இந்த உலக முடிவைப்பற்றி என்ன சொல்லியுள்ளது என்று சுருக்கமாகப் பார்ப்போம்.

 உலக முடிவைப் பிரளயம் என்று சைவம் சொல்லுகின்றது. இவ்வாறு ஐந்து வகையான பிரளயங்களைப்பற்றியும் அவற்றின் காலங்களைப்பற்றியும் சைவம் விளக்கமாகவும், துல்லியமாகவும், அச்சொட்டாகவும் சொல்லுகின்றது. .

 1. நைமித்திக பிரளயம்; இது ஒவ்வொரு மன்வந்தரத்தின் முடிவிலும் நிகழ்வது. ஒவ்வொரு மன்வந்தரமும் எழுபத்தொரு சதுர்யுகங்கள் கொண்டது. தற்போது நடப்பது வைவஸ்வத மன்வந்தரத்தில் இருபத்தெட்டாவது சதுர்யுகம். சதுர் என்றால் நான்கு. ஒவ்வொரு சதுர்யுகமும் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்று நான்கு யுகங்கள் கொண்டது. ஒவ்வொரு சதுர் யுகத்திலும் நாற்பத்து மூன்று இலட்சத்து இருபதாயிரம் வருடங்கள் உள்ளன. வைவஸ்வத மன்வந்தரத்தின் இருபத்தெட்டாவது சதுர் யுகத்தில் கிருத, திரேதா, துவாபர யுகங்கள் முடிந்து இப்போது நடப்பது நான்காவது யுகமான கலியுகம். இது நான்கு இலட்சத்து முப்பத்திரண்டாயிரம் வருடங்கள் கொண்டது. இந்தக் கலியுகம் மகாபாரத யுத்தம் முடிந்து கிருஷ்ண பரமாத்மா இவ்வுலக வாழ்வை நீத்த பின்னர் கி.மு. 3101 பெப்ரவரி மாதம் பதினேழாம் திகதி தொடங்கியது. ஆகவே கலியுகம் முடிய இன்னமும் நான்கு இலட்சத்து இருபத்தாறாயிரத்து எண்ணூற்று எண்பத்தெட்டு வருடங்கள் உள்ளன. இந்த கலியுகம் முடியும் தறுவாயில் விஷ்ணுவின் கல்கி அவதாரம் நிகழும். அவர் விஷ்ணுயசிரயன் (விஷ்ணுயசஸ்) என்னும் அந்தணனுக்கு மகனாக சாம்பலம் என்ற கிராமத்தில் பிறப்பார். மீண்டும் தர்மத்தை நிலை நிறுத்துவார். ஆனால் உலக முடிவு வராது. இந்த கலியுகம் முடிய இருபத்தொன்பதாவது சதுரயுகத்தின் முதலாவதுயுகமான கிருத யுகம் மீண்டும் தொடங்கும். இதையே ரஷ்யப் புரட்சி பற்றிப் பாடும்போது பாரதி "கிருத யுகம் எழுக மாதோ" என்று பாடினான்.

 இவ்வாறு ஒன்றன் பின் ஒன்றாக எழுபத்தொரு சதுர்யுகங்களும் கழிந்த பின்னர் மன்வந்தர முடிவில் ஒரு பிரளய அழிவு உண்டாகும். அது எமது பூலோகத்துக்கு மட்டும் நிகழ்வது. பூலோகம் என்பது பூமி மட்டும் அல்ல; எமது சூரிய குடும்பம் உள்ளிட்ட இரண்டாயிரம் மில்லியனுக்கு மேற்பட்ட சூரிய குடும்பங்களை உடைய எமது ஆகாயகங்கை என்னும் இந்தப் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் இந்தப் பிரளயத்தில் அழியும். இதுவே நாம் வாழும் எமது உலகின் முடிவுக்காலமாகும். இவை யாவும் ஒரு கிருத யுக காலம் அதாவது பதினேழு இலட்சத்து இருபத்தெட்டாயிரம் வருடங்கள் நீருள் அமிழ்ந்திருக்கும். இந்தப்பிரளயம் எப்படி இருக்கும் என்று சிந்திப்பவர்கள் 2012 திரைப்படத்தைப் பார்த்தால் பிரளயம் என்பது எப்படி இருக்கும் என்று புரிந்துகொள்ளலாம்.

 ஆனால் பிரளயம் வருகின்ற 2012 இல் நிகழாது. கி.பி. நான்கு இலட்சத்து இருபத்தெண்ணாயிரத்து எண்ணூற்று எண்பத்தொன்பதாவது வருடமளவில் வரப்போகின்ற பிரளயத்தில் இந்தப் பூமி மட்டுமல்ல நமது ஆகாய கங்கை என்னும் பால்வீதியில் உள்ள அத்தனை அண்டத்தொகுதிகளும் அழியும். அப்போது பூலோகம் தவிர்ந்த ஏனைய உலகத்தொகுதிகள் யாவும் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். பிரளய கால முடிவில் மீண்டும் இந்த உலகங்கள் பிரம்மாவினால் படைக்கப்படும்.

 இவ்வாறான பிரளய காலம் ஒன்றில் நீருள் அமிழாது அக்காலத்தில் உயர்ந்து நின்ற சிகரம் ஒன்றுதான் திருஞானசம்பந்தர் அவதரித்த சீர்காழி. இதேமாதிரியாக 2012 திரைப்படத்தில் எமது இன்றைய உலகின் உயர்ந்த சிகரமான எவரெஸ்டு ஒரு சிறு குன்றாக தண்ணீருக்கு மேல் நிற்பதையும் அதன்போது ஆபிரிக்காவில் வேறொரு மலை உருவாகி அதுவே அப்போதைய உலகின் உயர்ந்த சிகரம் என்றும் திரைப்படம் சொல்வது ஒப்பிடத்தக்கது. அம்மையப்பராகிய இறைவர் பிரளய காலத்தில் பிரணவத்தைத் தோணியாக்கி சீர்காழியில் சுற்றி வந்ததாக சைவம் கூறுகின்றது. இதனாலேயே சீர்காழிக்கு தோணிபுரம் என்று பெயர். இது திரைப்படத்தில் கப்பலில் இடம் பிடித்து தப்பிப்பிழைப்பவர்கள் குன்றாகக் குறுகிப்போய் நிற்கும் எவரெஸ்டை தமது கப்பலில் பார்வையிட்டுச் சுற்றி வருவதோடு ஒப்பு நோக்கத்தக்கதாகும். 

 2. நித்திய பிரளயம்; ஆயிரம் சதுர் யுகங்களுக்கு அதாவது 362 கோடி வருடங்களுக்கு ஒருமுறை நிகழவது நித்திய பிரளயம் ஆகும். இது ஒரு கல்ப காலம். இது படைப்புக்கடவுளான பிரம்மாவுக்கு ஒரு பகற்பொழுது. இப்போது நடப்பது சுவேதவராக கல்பமாகும். முன்னைய கல்ப முடிவில் அமழ்ந்திருந்த உலகத்தை விஷ்ணுவானவர் வெள்ளைப்பன்றி வடிவெடுத்து மேலே கொண்டு வந்ததால் இதற்கு இந்தப்பெயர். சுவேதம் என்றால் வெள்ளை; வராகம் என்றால் பன்ற என்று அர்த்தம். இது விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று. நித்திய பிரளயத்தில் எமது பூலோகம் என்னும் பால்வீதியில் உள்ள அனைத்து அண்டத்தொகுதிகளுடன் அதற்கும் அப்பாலும் உள்ள புவர் லோகம்,  சுவர் லோகம் என்னும் அண்டத்தொகுதிகளும் அழியும். இந்த மூவுலங்களைச்சார்ந்த அண்டங்கள் யாவும் இந்த நித்திய பிரளயத்தின் பின்னர் ஆயிரம் சதுர் யுக காலம் நீரினுள் அமிழ்ந்திருக்கும். இது பிரம்மாவுக்கு இரவுக்காலமாகும். இக்காலத்தில் இந்த மூவுலகங்கள் தவிர்ந்த ஏனைய உலகங்கள் வழமைபோல இயங்கிக்கொண்டிருக்கும். இதன் பின்னர் பிரம்மாவினுடைய பகல் தொடங்க அவர் இம்மூவுலகங்களையும் முன்போலப் படைப்பார். 

 3. அவாந்தர பிரளயம்; நாம் வசிக்கும் பூமி உள்ளிட்ட பால்வீதி அண்டத்தொகுதிகள் யாவும் பூ லோகம் என்று பார்த்தோம். இதற்கு மேலே ஏழு உலகத் தொகுதிகள் உள்ளன. இவற்றின் வரிசை பின்வருமாறு: 

1. பூலோகம்

2. புவர் லோகம் ;இது எமது பால் வீதிக்கு அடுத்ததாக 2.5 மில்லியன் ஒளி வருட தூரத்துக்கு அப்பால் உள்ள அன்ட்றோமீடா அண்டத்தொகுதியாக இருக்கலாம். (Andromeda galaxy is 2.5 million light years away from our earth. This galaxy itself is so large and the light takes 150,000 years to traverses through this galaxy).

3. சுவர் லோகம் - இதைத்தான் சுவர்க்க லோகம் என்று மதங்கள் கூறுகின்றன.

4. மஹர் லோகம்

5. ஜன லோகம் -இங்குதான் எமது பித்ருக்கள் உறைகின்றார்கள்.

6.தப லோகம்

7.சத்திய லோகம் - இங்கு பிரம்மா தனது பத்தினிகளாகிய காயத்திரி, சாவித்திரி, சரஸ்வதி ஆகியோருடன் உறைகின்றார்.

 இந்த உலகங்களின் குறிப்பை காயத்திரி மந்திரத்திலும் காணலாம். இதற்கும் மேலே விஷ்ணு லோகம் உள்ளது. இதை வைகுந்தம் என்பர். இதற்கும் மேலே உள்ளது  சிவலோகம்.

 இதேபோல கீழ் உலகங்கள் அதளம் முதல் பாதாளம் ஈறாக ஏழு உள்ளன. இவையாவன

1. அதலம்

2. விதலம்

3. சுதலம்

4. தலாதலம்

5. ரசாதலம்

6. மகாதலம்

7. பாதாளம்

இதனால்தான் ஒருவருடைய வீழ்ச்சியைக் குறிப்பிடும்பொழுது அதல பாதாளத்தில் விழுந்து விட்டார் என்று கூறும் வழமை உள்ளது.

 இவ்வாறாக மேல் உலகங்கள் ஏழு,  கீழ் உலகங்கள் ஏழு என்று எல்லாமாக பதினான்கு உலகத்தொகுதிகள் எமது பூலோகத்துக்கு அயல் உலகங்களாக உள்ளன. இவற்றையே "புவனம் பதினான்கையும் பூத்தவளே" என்று அபிராமி அந்தாதியும் "நின் கிங்கிணி ஓசை பதினான்குலகமும் கேட்டதுவே" என்று கந்தரலங்காரமும் கூறுவதும்  இந்தப் பதினான்கு உலகத் தொகுதிகளையே. இவற்றுள் எமது அண்டவியல் விஞ்ஞான அறிவு ஆராய்ச்சிகளுக்கு உட்படுவது பூலோகம் என்னும் பால்வீதி அண்டத்தொகுதியாகும். இதன் படங்களைப் பார்த்தால் ஒரு பாய்ச்சுருள் போல் இருக்கும். இதையே பாய்ச்சுருளான அண்டத்தொகுதி என்று பாகவத புராணம் கூறுகின்றது.

 இந்தப் பதினான்கு உலகங்களுக்கும் அப்பால் இன்னமும் பல அண்டத்தொகுதிகள் உள்ளன. இவற்றில் ஆறு பேரண்டங்களை உள்ளடக்கிய அண்டத்தொகுதியைப் பிரம்மாண்டம் என்று கூறுவர். மானுட சிந்தனைக்கும் ,கற்பனைக்கும் எட்டக்கூடிய அதிகூடிய அண்டப்பரிமாணம் இதுதான்.

 இந்த ஆறு அண்டத்தொகுதிகளுக்கு அப்பாலும் எட்டு திக்குகளிலும்,  மற்றும் மேல் கீழாகவும் திசை ஒவ்வொன்றுக்கும் பத்து பத்தாக நூறு அண்டத்தொகுதிகள் உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் உச்சியில் பத்திரகாளி புவனமும், வீரபத்திர புவனமும் உள்ளன. ஆக மொத்தமாக நூற்றெட்டு புவனங்கள் ஒன்றாக நிவிருத்தி கலா புவனங்களாக உள்ளன. நாம் நூற்றெட்டு நாமங்கள் சொல்லி வழிபடுவது எமது அயற்புவனங்களான இந்த நூற்றெட்டு புவனங்களில் உள்ள அனைத்து உயிர்களின் க்ஷேமத்துக்காகவே. இந்த நூற்றெட்டு புவனங்களுக்கு அப்பாலும் பிரதிட்டாகலை புவனங்கள் என்று ஐம்பத்தாறு அண்டத்தொகுதிகள் உள்ளன.

முன்னர் சொன்ன நூற்றெட்டு புவனங்களுடன் இந்த ஐம்பத்தாறு புவனங்களுமாக உள்ள நூற்று அறுபத்து நான்கு புவனங்களும், அவற்றைப் படைத்துக் காத்து அழிக்கும் திரிமூர்த்திகளாகிய பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களும் பல்லாயிரம் கோடி வருடங்களினூடாக இவற்றுக்கு அப்பாற்பட்டுள்ள வித்தியா தத்துவ புவனங்களில் வதியும் ஸ்ரீகண்ட ருத்திரரிடம் ஒடுங்குவது அவாந்தரப் பிரளயம் ஆகும். இங்கு கூறப்படுகின்ற பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்கள் இவ்வுலகங்களில் உள்ள மற்றைய உயிர்களைப்போல முக்குண தோஷங்களுக்குட்பட்டவர்களே இவர்களை குணிப் பிரம்மா, குணி விஷ்ணு, குணி உருத்திரன் என்று சைவம் கூறுகின்றது. இவர்கள் பிறப்பு இறப்புகளுக்கு அப்பாற்பட்ட இறையின் பரப்பிரம்மா. மகாவிஷ்ணு, பரசிவன் ஆகிய தோற்றங்களில் இருந்து வேறுபட்டு நிற்பவர்கள். எப்பொழுதும் பர மற்றும் மகா என்னும் சிறப்புப் பதங்கள் ஒப்புயர்வற்ற ஒன்றேயான பிறப்பு இறப்பு அற்ற ஒரே இறையைக் குறிக்கும் பதங்களாம்.

4. மத்திம பிரளயம்; ஸ்ரீகண்ட ருத்திரரும் அவர் உள்ளிட்ட ஏனைய உயிர்களும் வதியும் குணதத்துவ புவனம் உள்ளிட்ட இருபத்தேழு வித்தியா கலை புவனங்களும் பல்லாயிரக்கணக்கான கோடி வருடங்களினூடாக சுத்த வித்தியா தத்துவ புவனங்களில் வதியும் அனந்தேசுவரர் என்னும் சிவனிடம் ஒடுங்குகின்றன. இது மத்திம பிரளயம் ஆகும். 

 5. மகா பிரளயம் அல்லது மகா சங்காரம்; மேற் சொன்ன அனந்தேசுவரர் உள்ளிட்ட உயிர்கள் வதியும் முப்பத்து மூன்று சுத்த வித்தை புவனங்களையும் ஒடுக்குவது இந்த புவனங்களுக்கும் தத்துவங்களுக்கும் அப்பாலாய் நிற்கும் பரப்பிரம்மமாகிய பரசிவன் ஆவார். இது மகாப் பிரளயம் அல்லது பேரூழிக்காலம் எனப்படும். இவர் சக்தியே பராசக்தி. இவரது நவந்தரு பேதமென்னும் ஒன்பது வடிவங்களில் ஒரு பேதமே மகாவிஷ்ணு. இந்த மகாசிவனே பஞ்ச கிருத்தியம் என்னும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் தொழில்களுக்குரிய சதாசிவர். இவரே சத் சித் ஆனந்த சொரூபியாகிய நடன சிவன் என்னும் நடராசர். இவரது திருமேனியே சிவலிங்கத் திருமேனி ஆகும். ஓம் ஸ்ரீ தத்துவாசனாயை நமஹா என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் கூறுவது இவ்வாறு 224 அண்டத்தொகுதிகளுக்கும் மூலமான முப்பத்தாறு தத்துவங்களையும் ஆசனமாக அல்லது தளமாகக்கொண்டு இருக்கும் இந்த பராசத்தியையே. இந்த தத்துவ உலகங்களுக்கு அப்பாற்பட்டு மஹாகைலாசம் இங்கு உள்ளது. அந்த மஹா கைலாசத்தில் நிலைகொண்டுள்ள சக்தியையே மஹாகைலாச நிலயாயை நமஹா என்று ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் கூறுகின்றது. அம்மையப்பராகிய இறை அமரும் கைலாசம் இதுவே. நமது பூலோக கைலாசம் இதன் ஒரு சின்னமே ஆகும். இங்கு கூறப்பட்ட 224 அண்டத்தொகுதிகளும் எமது புவி சார்ந்த கோடிக்கணக்கான அண்டத்தொகுதிகளில் ஒன்றினது விவரணமேயாகும்.

 இவ்வளவு காலமும் இறையின் பஞ்ச கிருத்தியங்களுக்கு காரணமாக இருந்த சக்தியும் மகாசங்காரத்தின் முடிவில் சிவத்தில் ஒடுங்கும். அப்போது சிவன் ஆடுவது சங்கார தாண்டவம். சிவனுடைய எல்லா தாண்டவங்களிலும் அருகில் இருக்கும் சக்தி இந்த சங்கார தாண்டவத்தில் இருப்பதில்லை. ஏனெனில் சங்கார காலத்தில் எல்லா உயிர்களும் மாயையில் ஒடுங்க, மாயை சக்தியில் ஒடுங்க, சக்தியும் சிவத்தில் ஒடுங்கும். அப்போது உலகின் இருமை வயப்பட்ட உந்தல்கள் எல்லாம் ஒடுங்கி ஒன்றாகும். இதையே அண்டவியல் விஞ்ஞானம் ஒருமைப்புள்ளி (point of singularity)என்று கூறுகின்றது. இதுவே ஸ்ரீ சக்கரத்தின் முப்பரிமாணமாக அமைந்துள்ள மகாமேருச் சக்கரத்தின் உச்சியில் உள்ள முக்கோண வடிவத்தின் மேல் உள்ள புள்ளியாகிய பிந்து.

 நவ ஆவரணங்களாகவுள்ள மகாமேருச்சக்கரம் இவ்வாறு பல்வேறு படிநிலைகளில் உள்ள அண்டத்தொகுதிகள் ஒன்றன் பின் ஒன்றாக, ஒழுங்கு முறையில், ஒன்றில் ஒன்று ஒடுங்கி, ஈற்றில் யாவும் சக்தியில் ஒடுங்க, அறுதியாக சக்தியும் சிவத்தில் ஒடுங்குவதைக் காட்டும் இயந்திர வடிவமாகும். சிவலிங்கத்தில் உள்ள ஆவுடையார் இந்த மகாமேருச்சக்கரத்தின் முக்கோண வடிவு குறிக்கும் பராசக்தியே. இந்த ஆவுடையாரை ஊடறுத்து நிற்கும் லிங்கம் மகாமேருச்சக்கரத்தின் உச்சிப் புள்ளியான பிந்து ஆகும். சில சக்கர வடிவங்களில் இந்தப்புள்ளி நீட்டமாக இலிங்க வடிவிலேயே அமைந்திருப்பதைக் காணலாம். இது ஈற்றில் சக்தியும் சிவத்தில் ஒடுங்குவதைக் குறிக்கின்றது.

 சக்தியை முழுமுதற் கடவுளாகக்கொள்ளும் சாக்த சம்பிரதாயத்தில் சிவமும் சத்தியில் ஒடுங்க, ஈற்றில் சத்தியே நிலை பெற்றிருப்பதாகச் சொல்வார்கள். அவர்கள் மகாமேருச்சக்கரத்தின் முக்கோணத்தை சிவம் என்றும், அதன் மேல் உள்ள புள்ளியை சக்தி என்றும் கொள்வர். இது சிவனின் உடலின் மேல் அமர்ந்திருக்கும் சக்தியின் திருவுருவப் படங்களுக்கு ஒப்பானது. ஆயினும் இம்முறையில் சிவலிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கும் இலிங்கத்துக்கும் விளக்கம் தர முடிவதில்லை. சைவம் ஒன்றேதான், தான் உள்ளிட்ட கடந்த கால, நிகழ்கால, எதிர்கால மதங்கள், அவற்றின் கொள்கைகள், வடிவங்கள் யாவற்றையும் உள்ளடக்கக்கூடியதாகவும், விளக்கும் தன்மையதாகவும் அமைந்து இவை எல்லாவற்றுக்கும் அப்பாலானதாய், இராஜாங்கத்து அமர்ந்து விளங்குகின்றது. சைவம் விளங்கினால் எல்லா சமயங்களும் விளங்கும். "மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்'

 இறுதியாங் காலந் தன்னில் ஒருவனே இருவருந்தம்

உறுதியின் நின்றா ரென்னின் இறுதிதான் உணாடாகாதாம்

அறுதியில் அரனே எல்லாம் அழித்தலால் அவனால் இன்னும்

பெறதும்நாம் ஆக்க நோக்கம் பேரதி கரணத்தாலே

                                            -சிவஞானசித்தியார் பாடல் 55-

 At the moment of the final dissolution of the universe there is only One,

If both of them are firm in their existence, then there wouldn't be an End,

At last everything is Haran, as He is everlasting after dissolving all;

We get everything back with His great operations (of creation, sustenance, dissolution, obscuration and Bestowing grace). 

                                - Siva Jnana Siddhiyaar Song -55-

Last Updated on Wednesday, 08 August 2012 16:17
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

Category
Home | About Us | Contact Us