inner page header

HINDUISM AS IT IS

 

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

Home
அன்னம் பாலிக்கும் Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail

அன்னம் பாலிக்கும்

குருவடி பணிந்து

இ.லம்போதரன் MD

www.knowingourroots.com

 இந்தியா சென்றிருந்த பொழுது சிதம்பரம் சென்று கோவில் தரிசனத்துக்காக மூன்று தினங்கள் தங்கியிருந்தேன். அன்று மாலைத் தரிசனத்துக்காக அந்திப்பொழுதில் சிதம்பரம் கோவிலுக்குச் சென்றிருந்தேன். மாலைப்பொழுது. சூரியன் மேற்கில் மறையப்போகும் நேரம். ஆயிரத்து நூறு வருடங்களுக்கு முன்னர் மாணிக்க வாசகர் உட்சென்ற அதே கிழக்கு வாசல் கோபுரத்தைக் கடந்து நான்காம் பிரகாரச் சுற்றில் வலம் வந்து கொண்டு இருந்தேன். தெற்கு கோபுர வாசலுக்கு முன்னதாக ஒரு அம்மா எதிர்ப்பக்கத்தில் இருந்து நடந்து வந்தார். "ஐயா பசிக்கிறது" என்று பிச்சை கேட்டார். நானோ இதற்கென்று கொண்டு வந்திருந்த சில்லறைக் காசு எல்லாம் இதற்கு முன்னராகவே இருந்த பிச்சைக்காரர்களுக்கு கொடுத்து முடித்துவிட்டேன். மடியில் இருந்து தாள் காசை எடுத்துக்கொடுக்க மனமில்லாமல் அந்த அம்மாளை கவனிக்காததுபோலப் புறக்கணித்து விட்டு நடந்தேன். அப்போது அந்த அம்மாள் "காலையிலை இருந்து எட்டு மைல் நடந்து வருகிறேன் சாமி. பசி வயிற்றைப் பிடுங்குது சாமி. ஏதாவது கொடுங்க" என்று தொடர்ந்து வந்து கேட்டார். இது மனத்தைத் தொட மடியில் இருந்து ரூபாத் தாளை எடுத்து நீட்டினேன். மனதில் ஒரு பாடலின் ஞாபகம் எழுந்தது. அது ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்னர் திருநாவுக்கரசர் பாடியது. 

“அன்னம் பாலிக்குந் தில்லைச் சிற்றம்பலம்

பொன்னம் பாலிக்கு மேலுமிப் பூமிசை

என்னன் பாலிக்கு மாறுகண் டின்புற

இன்னம் பாலிக்கு மோஇப் பிறவியே”

ஒரு கேள்வியும் மனதில் எழுந்தது. அன்னம் என்றால் சோறு என்று பொருள். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலத்தின் உட் பிரகார வீதியில் அன்னம் கேட்டு பிச்சை எடுக்கும் நிலையில் ஒரு பெண். "ஞானி வாக்கு பொய்த்து விட்டதே" இது மனதைப் பிசைந்து வாட்டியது. விடை கிடைக்கவில்லை.

மாதம் ஜூலை நடுப்பகுதி. இந்தியாவில் இருந்து பேராசிரியர் சண்முகவேல் அவர்கள் சைவ சித்தாந்த வகுப்புகள் கலந்துரையாடல்களுக்காக ரொரன்டோ வந்திருந்தார். அத் தம்பதிகளை நானும் கவிஞர் கந்தவனம் ஐயா அவர்களும் விமான நிலையம் சென்று வரவேற்று வீட்டுக்கு அழைத்து வந்தோம். மதிய போசனத்துக்காக எல்லாரும் அமர்ந்த பொழுது அவர் போசனத்துக்கு முந்திய இறை வணக்கமாக மேலே சொன்ன திருநாவுக்கரசர் தேவாரத்தையும் "மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன அண்ணலார் அடியார்தமை அமுது செய்வித்தல்" என்று தொடங்கும் பெரிய புராணப்பாடலையும் பாடினார். அப்போது அன்னம் என்ற சொல் பற்றிய சம்பாசணை வந்தது. அன்னம் என்பது உண்ணும் சோறு மட்டுமல்ல வீடு பேற்றையும் குறிப்பது என்று கூறினார்கள். அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் என்றால் வீடு பேற்றைத்தந்து அருளுகின்ற தில்லைச் சிற்றம்பலம் என்று பொருள்.

தலைக்குள் பொறி தட்டியது. 

“தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்

சாதியும் வேதியன் தாதைதனைத் தாளிரண்டுஞ்

சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்

பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்”

                                                  - திருவாசகம்-

சிவ பூசையைச் சிதைத்தவனை பிராமணன் என்றும் பாராது தனது பெற்ற தந்தை என்றும் பாராது தனது முதற் குரு என்றும் பாராது அவனது தாளிரண்டையும் மழுவால் சிதைத்து இதனால் பிரம்மஹத்தி, பித்ரு ஹத்தி, குருஹத்தி ஆகிய மூன்று மாபாதகங்களைச் செய்த பிரம்மச்சாரியான விசார சர்மாவுக்கு தேவர்கள் தொழும்படியாக சண்டேசுர பதம் தந்து வீடு அளித்தவன் சிவன். இங்கு சோறி எனபது வீடுபேறு. மாணி என்றால் பிரம்மச்சாரி. 

ஞானிகள் வாக்கு பொய்க்காது. அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் தான். அங்கு நாம் எல்லாம் அன்னப் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் தாம்.

ஆனால் இந்தப்பிச்சைக்காரர்கள் எல்லாம் பெரும் செல்வர்கள்.

2008 ஜூலையிலேயே ஒரு திருமணப்பேச்சு விடயமாக சில நாட்கள் இந்தியா செல்ல நேர்ந்தது. சென்னையில் இருந்தபொழுதே எனது துணைவியாருக்கு வயிற்றோட்டம் கண்டது. கடைசி நேரம் வரை எப்போது விசா கிடைக்கும் என்று தெரியாமல் இருந்தபடியினால் கனடாவில் புறப்படமுன்னர் தடுப்பு மருந்துகள் எடுக்கவில்லை. இருந்தும் சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு வான் ஒன்றில் பயணம் செய்து அங்கு சாரதா டாம் ஹோட்டலில் தங்கினோம். முதல் நாள் தரிசனத்துக்கு கோவில் வாசல் வரை வானில் வந்துவிட்டு இயலாமையால் ஹோட்டலுக்கே திரும்பி விட்டார் எனது துணைவியார். நாம் மட்டும் தரிசனம் செய்து திரும்பினோம்.

          சிதம்பரத்தில் அர்த்தசாமப்பூசையும், அதிகாலைப் பூசையும் மிக விசேடமானவை. உலகின் எல்லாக் கோவில்களின் மூர்த்தங்களும் அர்த்தசாமப்பூசையின் பின்னர் சிதம்பரத்தில் ஒடுங்குவதாக ஐதீகம். இதனால் தமிழ் நாட்டில் சிதம்பரத்திலே மற்றக்கோவில்களின் அர்த்தசாமப்பூசை முடிந்தபின்னர் இரவு பத்து மணியின்மேல்தான் அர்த்தசாமப்பூசை தொடங்குகின்றது. இதன்போது இலிங்க வடிவில் உள்ள நடராசர் சிற்றம்பலத்தில் இருந்து பல்லக்கில் மல்லிகைப்பூவுடன் பவனியாக சிவகாமி உள்ள பள்ளியறை ஊஞ்சலுக்கு எடுத்துச்செல்லப்படுவார். மஞ்சத்தில் அவர்களை அமர்த்தி வாசனைத்தூபம் காட்டி கற்கண்டு, ஏலக்காய் போட்டுக்காய்ச்சிய பால் கொடுத்து பூசை பண்ணி பள்ளியறை சாத்துவார்கள். உலகதாம்பத்தியத்துக்கு மூலமான சிவசத்தி ஐக்கியம் இது.

“சத்தியும் சிவமும் ஆயதன்மை இவ்வுலகம் எல்லாம்

ஒத்து ஒவ்வாஆணும் பெண்ணும்ஆக உணர்குண குணியும்ஆகி

வைத்தனன் அவளால்வந்த ஆக்கம் அவ்வாழ்க்கை எல்லாம்

இத்தையும் அறியார் பீடலிங்கத்தின் இயல்பும் ஓரார்”

                                                  -சிவஞானசித்தியார் 89-

As the dual aspects of the Being is there as Sakthi and Sivam

All in this world have the same dual forces, as per the Being

As positive and negative, as masculinity and femininity

They are together in life and interacting with joy, ALL these are from Siva- Sakthi

Those who don't know this don't know the meaning of Siva Linga.

                                    - Siva Jnana Siddhiyaar Song 89-

மறுநாள் அதிகாலை பள்ளியறையில் இருந்து பூசையுடன் நடராசரைத் துயிலெழுப்பி மீண்டும் சிற்றம்பலத்துக்கு கொண்டு வருவார்கள். இவ்வாறு அதிகாலையில் பள்ளியறைக்கதவு திறக்கும்போது சிதம்பரத்தில் முதல் நாள் அர்த்தசாமப்பூசையின்போது வந்து ஒடுங்கியிருந்த அனைத்துக் கோவில்களின் மூர்த்தங்களும் அங்கிருந்து வெளிப்படும். அந்நேரம் முன்னின்று தரிசித்தல் அனைத்து கோவில் மூர்த்த்ங்களையும் தரிசிப்பதற்கு சமம் என்பர். இப்போதும் ஒரு கேள்வி. இந்திய நேரத்துக்கு இவ்வாறு மற்றக்கோவில்களில் சாமப்பூசை முடிந்த பின்னர் சிதம்பரத்தில் பூசை நடைபெறலாம். அமெரிக்காவிலும், கனடாவிலும் அப்போது பகல் நேரமல்லவா. இங்குள்ள கோவில்களில் அப்போதுதானே பூசைகள் ஆரம்பமாகின்றன. இவ்வாறு உலகளாவிய நிலையில் பார்க்கும்பொழுது சிதம்பரத்தின் அர்த்தசாமப்பூசை அர்த்தமில்லாமல் போய்விடுகின்றதே.

               கட+உள் என்று எல்லாவற்றையும் கடந்து அப்பாலுக்கு அப்பாலாய் அண்டசராசரமெங்கும் நிற்கும் அதே இறை (Cosmic From of the Lord) எல்லாவற்றுக்கும் உள்ளாய் எமது உயிர்க்கு உயிராய், உயிரின் எசமானனாய் (இயமானனாம் விமலா - சிவபுராணம்; இயமானன்- எசமானன்), எமது ஆன்மாவில் உள்ள இதயத்தாமரையினுள் உள்ள சிறிய ஆகாசத்தில் ( சிற்றம்பலம்) உறைகின்றார். இதையே உள்ளக்கமலம் என்று கூறுவர்.

வெள்ளைநிறப் பூவுமல்ல வேறெந்த மலருமல்ல

உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது”.

                                                   - சுவாமி விபுலானந்தர்-

மலர் மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடு வாழ்வார்

                                       - திருக்குறள்- 

அண்ட சாராசரமெங்கும் நிறைந்துள்ள இறையை புருஷ சூகதமும் ஸ்ரீ ருத்திரமும் பறை சாற்ற ஆத்மாவின் சிறிய காசத்தில் உறையும் இறையை தகர வித்தை என்று உபநிடதங்கள் பறை சாற்றுகின்றன. உள்ளுறையும் இந்த இறைதான் உலகின் எல்லா இறைமூர்த்தங்களுக்கும் மூலம். இதுவே எல்லாக்கோவில்களின் இறை மூர்த்தங்களும் இங்கு ஒடுங்குவதாகவும், மீண்டும் இங்கிருந்தே வெளிப்படுவதாகவும் கூறுவதன் தாற்பரியம். 

கோவில்களில் நடைபெறும் பூசைகளை பரார்த்த பூசை என்று கூறுவர். இது உலக நன்மைக்காக நடைபெறும் பூசை. இதன் தொடக்கத்தில் அண்டசாராசரமெங்கும் நிறைந்து, அப்பாலுக்கு அப்பாலாய் விளங்கும் இறையை ஆலயத்தில் உள்ள மூர்த்தத்தில் எழுந்தருளும்படி பிரார்த்தித்து பின்னரே பூசைகள் செய்வர். இது ஆவாகனம் (Invoking God) எனப்படும். 

இதேபோல வீட்டில் நாங்கள் முறைப்படி செய்யும் பூசை ஆன்மார்த்த பூசை எனப்படும். இது எமது சொந்த நன்மைக்காகச் செய்யப்படுவது. இதன்போது தொடக்கத்தில் எமது ஆத்மாவில் உறையும் இறையை நாம் வழிபடும் பிரதிமையில் எழுந்தருளும்படி பிரார்த்தித்து ஆவாகனம் செய்த பின்னரே பூசை செய்கின்றோம். 

திருமுறைகள் ஓதும்பொழுது தொடக்கத்தில் ஒருமுறையும் முடிவில் ஒருமுறையும் திருச்சிற்றம்பலம் என்று சொல்லுகின்றோம். முதலில் கூறும் திருச்சிற்றம்பலம் அண்டசாராசரமெங்கும் நிறைந்துள்ள இறைக்கு சொல்லப்படுவது. முடிவில் சொல்லும் திருச்சிற்றம்பலம் ஆத்மாவில் உள் உறையும் இறைக்கு சொல்லப்படுவது. 

இது ஒரு புறமிருக்க அடுத்த நாள் காலையில் உடல் நிலையும் சுகமாக அதிகலைப்பூசைக்காக ஐந்து மணிக்கே சென்று கோவில் கிழக்கு வாசல் கோபுர வீதி முகப்பில் அங்குள்ள கடையில் தேனீரும் வாங்கி அருந்தி விட்டு வாசல் திறக்கப்படும்வரை காத்திருந்தோம். அந்த கிழக்கு கோபுர நுழைவாசலில் பூ விற்றுப் பிழைக்கும் பெண்மணி ஒருவர் அந்த அதிகாலையிலேயே அங்கு வந்து கோபுர வசலை கூட்டித் துப்பரவு செய்து நீர் தெளித்து பின்னர் அரிசி மாவினால் கோலமும் இட்டார். கிட்டத்தட்ட அறுபது வயது மதிப்புள்ள அந்தப்பெண்மணி கோலம் இடும்பொழுதுதான் கவனித்தேன். அவருக்கு கையில் விரல்கள் பல இல்லை. குஷ்ட நோய் என்னும் தொழு நோய் அவரின் கை விரல்கள் பலவற்றை அழித்திருந்தது. மருத்துவன் ஆனபடியினால் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடிந்தது. முன்னர் போல் இல்லாமல் இப்போது தொழுநோய்க்கான மருந்துகளும் சிகிச்சை வசதிகளும் பரவலாக கிடைக்கின்றன. ஆயினும் தொடக்க காலத்திலேயே கண்டறிந்து சகிச்சை செய்யாவிட்டால் இந்நிலை ஏற்படலாம். இந்நிலையிலும் அதிகாலையில் சிதம்பரக் கோவில் வாசலுக்கு வெளியில் அவர் செய்து வரும் தொண்டு என் உள்ளத்தைத் தொட்டது. அவரை என் மனதால் தாள் தொட்டு வணங்கினேன். ஆயினும் முதலிலேயே அதற்கு முன்னால்  இருந்த கடையில் பூசைக்காக பூ வாங்கியிருந்ததால் அன்று அந்தப்பெண்ணிடம் மீண்டும் பூ வேண்டவில்லை. மறுநாள் வரும்பொழுது இந்தப்பெண்ணிடமே பூ வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். அன்றைய தரிசனம் முடிந்து திரும்பினோம். 

மறுநாள் காலையில் அதிகாலைப் பூசைக்கு இதே போல கீழக்கோபுர வாசல் வழியாகப் போகும் பொழுது முதல் நாள் பார்த்த அதே அம்மையாரிடம் மல்லிகை சரமாக நடராசருக்கு சாற்றுவதற்கு என்று வாங்கினேன். அவரோ நான் கேட்ட அளவு மல்லிகைச்சரத்தோடு நான் கேட்காமலே சில தாமரைப் பூக்களையும் என்னிடம் தந்தார். இதை எதிர்பாராத நான் அந்த தாமரைப்பூக்களுக்கு என்று மேலதிகமாகப் பணத்தை அவர் கையில் திணித்தபோது அவர் அதை வாங்க மறுத்து திருப்பித் தந்து 'சாமி நடராசர் எனக்கு நிறையவே கொடுத்திருக்கார் சாமி, என்று சொல்லி மேலும் சில தாமரைப்பூக்களையும் தந்தார். அந்த பூ விற்கும் பெண்ணின் முன்னால் பிச்சைக்காரனாக ஏழையிலும் கடைப்பட்ட ஏழையாக நான் நின்றேன். தலையில் பொறி தட்டியது. இன்னொரு பாடல் ஞாபகத்துக்கு வந்தது. இது 1300 ஆண்டுகளுக்கு முன்னர் சம்பந்தர் பாடியது.

“செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்

செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற

செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய

செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே”  

இந்தச் செல்வர்களுக்கு முன்னால் நாம் எல்லாம் ஏழையிலும் ஏழையான பிச்சைக்காரர்களே. அன்னப்பிச்சை கேட்கும் பிச்சைக்காரர்கள். எண்ணிலா சிதம்பர இரகசியங்களில் இவை சில. 

Last Updated on Wednesday, 08 August 2012 15:26
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

Category
Home | About Us | Contact Us