inner page header

HINDUISM AS IT IS

 

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

 

 

SCIENCE OF SAIVA SIDDHANDA

Knowing our roots is dedicated for the exposure, expression and explanation of our heritage, culture, wisdom, spirituality, religion, philosophy, language, literature and healing for a meaningful, integrated, sustainable, holistic, healthy lifestyle with respectful, un-exploiting relationship and interactions with our fellow humans, living beings, and mother nature in the name of ancient wisdom of Saiva Siddhanta, the conflict free faith, cosmic truth and lifestyle

Statement of Faith

 


 சைவத்தின் குரல் - voice of saivam


 தொடர்புகளுக்கு...

மெய்யகம் - The Temple of Truth

5633 Finch Ave East Unit  1

Scarborough, ON.  M1B 5K9

Canada

Email :       satsang@knowingourroots.com

 


 

 Calendar  2018  
 
 NOV 18th 2018
 
16:00  TO 18:30 EST 
 
 
Youth and Kids Classes 
                       
 19:00 TO 21:30 EST 

சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்

SATSANG With Dr.R. Lambotharan


 

 
சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்
 
 
 
 
 
 

 

Home
ஆத்மஜோதி-எனது அறிமுகம்……… Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail

ஆத்மஜோதி-எனது அறிமுகம்………

குருவடி பணிந்து

மருத்துவ கலாநிதி இ. லம்போதரன்

www.knowingourroots.com

ஆத்மஜோதியுடன் எனது அறிமுகத்தைப்பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் இன்னொருவரைப்பற்றியும் நான் சொல்லவேண்டும். அவர்தான் ஆத்மஜோதியை எனக்கு அறிமுகம் செய்து வைத்தவர். இவரைப்பற்றிச் சொல்லவேண்டும் என்றால் நான் இன்னும் தொண்ணூறு ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லவேண்டும். 

அது மதமாற்றம் தீவிரமடைந்திருந்த காலம். ஆசியாவிலேயே முதலாவதாகத் தொடங்கப்பட்ட  பெண்கள் விடுதிப்பாடசாலையான உடுவில் மகளிர் கல்லூரியின் ஒரு வகுப்பறையில் ஆசிரியர் நுழைகின்றார். மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்து அமர்ந்தபின் " அஞ்ஞானிகள் அனைவரும் எழுந்திருங்கள்" என்று ஆசிரியர் முழங்குகின்றார். வழக்கம்போல இன்னமும் சைவ சமயத்தில் இருக்கின்ற மாணவிகள் அனைவரும்  எழுந்து நிற்கின்றார்கள். ஒரு சைவ மாணவி மட்டும் தன் இருக்கையைவிட்டு அசையவில்லை. ஆசிரியர் அவளை நெருங்கினார். "ஏன் நீ எழுந்து நிற்கவில்லை?" ஆசிரியர் அதட்டுகிறார். 

"நான் அஞ்ஞானி இல்லை" மாணவி அமைதியாகக் கூறினாள். "அப்படியானால் நெருப்பு உன்னைச் சுடக்கூடாது. எங்கே விரலை நீட்டு. நெருப்புக்குச்சியைக் கொழுத்தி வைத்துப் பரிசோதித்துப் பார்ப்போம் நீ அஞ்ஞானியா இல்லையா என்று" இது ஆசிரியரின் பதில். 

முதலில் உங்களைச் சோதித்துப் பாருங்கள். பின்னர் நான் செய்கிறேன். இது மாணவியின் நறுக்கென்ற பதில். ஆசிரியர் மெல்ல விலகுகிறார் பாடத்துக்கு. 

சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்குப் பின்னால் இந்த மாணவி இப்பொழுது ஏழு பிள்ளைகளின் தாயாக மக்கள் மருமக்களுடன் கூடிய ஒரு கூட்டுக் குடும்பத்தின் தலைவி. தனது வீட்டுக்கு மணமுடித்து வந்த மருமகளுக்கு " நான் உமக்குத் தாயாகவும் இருப்பேன்; மாமியாகவும் இருப்பேன்; தோழியாகவும் இருப்பேன்" என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார். வந்த மருமகளுக்கு அவ்வாறே வாழ்ந்தும் காட்டி கணவன் மற்றும் பிள்ளைகளுக்கான உணவுக் கட்டுப்பாடுகள், பெண்களின் மாதவிடாய்ச்சக்கரம், கணவன் மனைவி உறவு, கருவிலக்கு போன்ற பல விடயங்களை அறிவுறுத்துகிறார்.  

இதே மருமகள் தனது வீட்டில் பொழுதுபோக்காக விதம் விதமான புறாக்கள் பலவற்றை வளர்த்து வந்தார். இவற்றால் வருமானம் ஏதும் இல்லாவிட்டாலும் அவருக்கு அதில் ஒரு மனமகிழ்ச்சி. அப்பொழுது இவர் மருமகளுக்கு கூறிய வார்த்தைகள் " வீட்டில் பசு வளர்த்தால் பால் தர வேண்டும், ஆடு வளர்த்தால் குட்டிகள் பெருக வேண்டும்;   நாய் வளர்த்தால் குரைத்து வீட்டைக் காக்க வேண்டும்; இப்படி செய்வது எதிலும் ஒரு பிரயோசனம் இருக்க வேண்டும்; பிரயோசனம் இல்லாதவற்றை வீணாகச் செய்து காலத்தையும் காசையும் விரயமாக்கப்படாது" என்று அறிவுறுத்துகிறார். 

சுமார் முப்பது வருடங்களுக்கு முன்னர் சமய ஆத்மீக விடயங்களைப் பற்றியும் நான்  அவருடன் கலந்துரையாடத் தொடங்கியிருந்த காலம். இந்தக் கலந்துரையாடல்களின் விடயங்கள் இப்போது தெளிவாக ஞாபகம் இல்லாவிட்டாலும் அவரின் பின்னாலேயே திரிந்து மணிக்கணக்கில் அலுக்காமல் கலந்துரையாடியது ஞாபகம் இருக்கின்றது. நான் அவரைக் கேள்விகள் கேட்டது குறைவு. ஆனால் எனது மனதில் எழும் கேள்விகளுக்கான எனது விடைகளை அவருடன் கதைத்துக்கொண்டே இருப்பேன். அவர் அலுக்காமல் ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருப்பார். இடைக்கிடை நறுக்காக, சுருக்கமாக சில வார்த்தைகள் சொல்வார். அது எனது தேடலை வழிப்படுத்துவதாக இருக்கும். ஆனால் அவர் தனது கருத்துக்களையோ, அல்லது கொள்கைகளையோ திணிக்க முயன்றதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு குறிப்பைச் சொல்லி எனது தேடலிலேயே என்னை விட்டுவிடுவார். இந்தப்பக்குவம் இன்று வரை எனக்கு வரவில்லை. 

இவர் தனது அறையில் தான் வருடக் கணக்காகச் சேர்த்து வைத்திருந்த ஆத்மஜோதி பிரதிகளை எனக்கு வாசிக்கத் தருகிறார். சில வேளைகளில் நான் பத்து இருபது பிரதிகளைக்கூட  அவரிடம் இருந்து ஒன்றாக இரவல் வாங்கிப்போய் வாசிப்பேன். சில நேரங்களில் அவருடன் இருக்கும் நேரங்களிலேயே வாசிப்பேன். அப்போது படித்தவற்றில் சிலவற்றை நடைமுறைப்படுத்தியதாகவும் ஞாபகம். ஆத்மஜோதி இதழில் வந்த மாதா ஜெய ஓம் லிலிதாம்பிகையே என்ற ஒவ்வொரு கிழமை நாளுக்கும் ஒன்றான பாடல்கள்,  திருவிளக்கு வழிபாட்டுப் பாடல்கள் போன்ற பலவற்றை பாராயணமாகப் பாடிப் பழகியிருக்கின்றேன். ஆத்மஜோதி இதழ்களில் வந்த அப்போது வாழ்ந்து கொண்டிருந்த பல ஞானிகளினதும், சித்தர்களினதும் வாழ்க்கை வரலாறுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ஈழத்துச் சித்தர்களின் வரலாறு, சிவபால யோகி சுவாமிகளின் வரலாறு எனபன பற்றி வாசித்துக் கலந்துரையாடிய ஞாபகம் உண்டு.

இவர் பொதுவாக இப்படி பணம் செலவழித்து பத்திரிகை, சஞ்சிகைகள், புத்தகங்கள் வாங்கிப் படிப்பவரல்ல. பின்னாளில் பிள்ளைகள் வாங்கிக்கொடுத்த காஞ்சிப்பெரியவரின் தெய்வத்தின் குரல், சாண்டில்யனின் நாவல்கள் அவர் அறையில் இருந்தன். இவற்றையும் அவரிடம் இரவல் வாங்கிப் படித்திருக்கின்றேன். இரவல் தந்தால் ஞாபகமாக அது திரும்பி வரும்வரை நினைவூட்டிக் கொண்டு இருப்பார். இதிலிருந்து இவர் இந்த சஞ்சிகைகளை எவ்வளவு அருமையாகக் கருதினார்; பாவித்தார் என்று நான் அறிந்து கொண்டேன். 

ஆனால் இவர் தான் பணம் செலுத்திப் பெற்று வாசித்து வந்த ஒரே ஒரு இதழ் ஆத்மஜோதி. இது பற்றி அவரிடம் கேட்டேன். அப்போது அவர் " முத்தையா என்று ஒரு மனுசன் நாவலப்பிட்டியில் இருக்கின்றார்; இப்படி ஒரு சஞ்சிகை கன காலமாக நடத்தி வருகின்றார்; அவர் சைவத்துக்கு நிறையச் செய்கின்றார்; சனங்களைக்கூட்டி பாதயாத்திரைகள் எல்லாம் போகிறவர்; நானும் அவரைச் சந்தித்திருக்கின்றேன்; அன்றில் இருந்து ஆத்மஜோதி சஞ்சிகைக்கு சந்தா பணம் கட்டி ஒழுங்காகப் பல வருடங்களாக எடுத்து வாசித்து வருகின்றேன்."  என்று கூறினார். 

இதுதான் ஆத்மஜோதி உடனான எனது அறிமுகம். அறிமுகம் செய்து வைத்தவர் எனது பாட்டியார் திருமதி கனகம்மா மயில்வாகனம். சித்தவைத்திய பாரம்பரியத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது கை நாடி பார்த்து " எனது பயணம் தொடங்கி விட்டது" என்று சொல்லிச் சில நாட்களில் சிறு விபத்து காரணாமாக 1989 இல் யாழ்ப்பாணத்தில் நான் மருத்துவ மாணவனாக இருந்த காலத்தில் காலமானார்.

Last Updated on Wednesday, 08 August 2012 14:16
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

Category
Home | About Us | Contact Us