inner page header

HINDUISM AS IT IS

 

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

Home
சைவ மரபில் ஐயப்பன் Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail
 

 

சைவ மரபில் ஐயப்பன்
Iyappan in Saivam
                                                                 
குருவடி பணிந்து
இ. லம்போதரன் MD
 
 
சைவம் சிவ சம்பந்தமானது. சைவத்தின் கடவுள் சிவன். சிவனுடைய அருவத் திருமேனிகள் நான்கு. அவை சிவம், சக்தி, நாதம், பிந்து என்பனவாம். சிவனுடைய அருவுருவத் திருமேனி சிவலிங்கம். இதை சதாசிவ மூர்த்தம் எனவும் சொல்வர். சிவனுடைய உருவத் திருமேனிகள் நான்கு. பிரம்மா, விஷ்ணு, உருத்திரன், மகேசுவரன். இந்த பிரம்மாவும் விஷ்ணுவும் அடி முடி தேடிய பிரம்மா விஷ்ணுக்கள் அல்லர். இவர்கள் சம்பு பட்சமான சிவ்விஷ்ணுவும், சிவபிரம்மாவும் ஆவர். அடி முடி தேடிய பிரம்மாவும் விஷ்ணுவும் பிரம்ம பதமும் விஷ்ணு பதமும் பெற்று உயர்ந்த ஆன்மாக்கள் ஆவர். இவர்களை அணுபட்ச பிரம்மா, அணுபட்ச விஷ்ணு என்றும் கூறுவர்.
 
நிற்க, உருவத் திருமேனியில் ஒன்றான மகேசுவரனுடைய மூர்த்தங்கள் இருபத்தைந்து. நடராசர், தட்சிணாமூர்த்தி எனபன அவற்றுள் நாம் அறிந்த சிலவாகும். இந்த இருபத்தைந்து மூர்த்தங்களில் ஒன்றுஹரியர்த்தர். இதைசங்கரநாராயணர்என்றும்ஹரிஹரன்என்றும் கூறுவர். இது சிவனை வலப்புறத்திலும் விஷ்ணுவை இடப்புறத்திலும் கொண்ட திருவுருவம் ஆகும்."அரியலால் தேவி இல்லை"என்று அப்பர் சுவாமிகள் பாடுகிறார். இந்த மூர்த்தத்தின் உடைய புத்திரனாகஹரிஹர புத்திரன் ஐயனார்விளங்குகின்றார்.
 
சிவன் தடை நீக்கத்துக்காகவும், ஞானத்தை அளிப்பதற்குமாக எடுத்த திருமேனி கணபதி. சைவ மரபில் முன்னர் இல்லாதிருந்த கணபதி வழிபாடு பெரியபுராணத்தின் சிறுத்தொண்ட நாயனாரான பரஞ்சோதியார் படைத்தளபதியாக இருந்து சாளுக்கியர்களின் வாதாபி நகரை வெற்றிகொண்ட போது அங்கிருந்து கொண்டு வந்து புகுந்தது என்று ஆராய்ச்சியாளர் கூறுவர். ஆனால் இவர் காலத்துக்கு முற்பட்ட கணபதி வடிவங்கள் தற்போது கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.
 
சிறுத்தொண்டரின் சமகாலத்தவரும், அவரைக்கண்டு அளவளாவி மகிழ்ந்தவரும், சைவ சமய குரவர்கள் நால்வரில் முதலாவதாக வைக்கப்படுபவருமாகிய திருஞானசம்பந்தர் தமது காலத்தில் கணபதி வழிபாட்டை எந்தவிதமான பேதமும் இன்றி ஏற்று தமது தேவாரத்திலும்"பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதி"என்று பாடிப்போந்துள்ளார். ஓம் என்ற பிரணவத்தின் வடிவான பெண்யானையின் வடிவை உமை எடுக்க, அதன் மிகுந்த விரிவாகிய பஞ்சாட்சர வடிவாகிய சிவன் ஆண்யானை வடிவு எடுத்து அவர்கள் இருவரின் சேர்க்கையால் நமது இடர்களைக் களைவதற்காகத் தோன்றியவர் கணபதி என்று பொருள் வரும்.
 
விநாயக புராணம் உட்பட வேறு புராணங்களில் பல் வேறு கற்ப காலங்களில் கணபதியின் பல் வேறுபட்ட தோற்றங்களைப்பற்றி பல விதமான வரலாறுகள் இருந்தாலும் அவருடைய தோற்றத்தை சிறப்பாகவும், தத்துவ விளக்கத்துடனும், தெளிவாகவும், எளிதாகவும் கூறுவது கந்தபுராணத்தில் உள்ள இந்த வரலாறு.
 
இவ்வாறாக சிவ புத்திரர்களான விநாயகர், சுப்பிரமணியர், வைரவர், வீரபத்திர்ர் ஆகிய நால்வரும் சைவ மரபில் சிவ மூர்த்தமாகவே கொள்ளப்படுகின்றார்கள். அதேபோல சிவன் மோகினி வடிவம் கொண்ட திருமாலைச் சேர்ந்தபோது தோன்றியவர் சாத்தனார் என்னும் ஐயனார் என்று தமிழில் உள்ள சைவத்தின் முப்பெரும் புராணங்களில் ஒன்றான கந்தபுராணம் கூறும்.
 
புராணங்களையும் சமயக்கதைகளையும் பழித்துரைக்கும் சிலர் சிவனும் திருமாலும் ஆகிய இரண்டு ஆண்கள் ஓரினச்சேர்க்கையாகச் சேர்ந்ததில் தோன்றியவரே ஐயப்பன் என்று கூறி ஏளனம் செய்கின்றனர். முதலாவதாக சைவம் பாலியலுக்கு நிறைவான ஆன்மீக முக்கியத்துவமும், விளக்கமும் தருகின்ற சமயம். பாலியலைப் பாவம் என்றும், சாத்தானின் வேலை என்றும் சொல்லிக்கொண்டே குடும்பம் நடத்தும் முரண்பாடு சைவத்துக்கு இல்லை. இரண்டாவதாக சைவம் பிறழ்பால் சேர்க்கையாளர்களை இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலுமே இழிவு படுத்திய சமயமல்ல.
 
சூனியக்காரர்கள் என்றும், சாத்தானின் பிடியில் உள்ளவர்கள் என்றும் இவர்களை உயிரோடு எரித்த சமயமல்ல எமது சைவம். சைவம் இவர்களைக் காலவரையறையின்றிச் சிறையில் அடைத்ததில்லை. மனித நேயமும், அடிப்படை மனித உரிமைப் பட்டயங்களும், மருத்துவமும், விஞ்ஞானமும் இப்போது ஒரு சில வருடங்களாக உணர்ந்து சொல்லிவருவதெல்லாம் சைவம் காலம் காலமாக உணர்ந்த உண்மைகளே என்பதை ஏளனம் செய்பவர்களும், விமர்சிப்பவர்களும் கவனிக்க.
 
இறையை நாதம் என்கின்ற சிவம் அல்லது அப்பன் என்ற ஆண் வடிவும் பிந்து என்கின்ற சக்தி அல்லது தாய் என்ற பெண்வடிவும் இணைந்த ஒருமித்த அம்மையப்பர் வடிவில் எப்பொழுதும், எங்கும் காணும் தரிசனம் சைவத்தின் முனைப்புண்மை. எம்மில் சிவமும் சத்தியும் செயற்படும் தளங்களுதான் நாதம், பிந்து தத்துவங்கள். இவை இரண்டும் இணையும் போது அடி வயிற்றின் கீழே உள்ள குண்டலினி சக்தி மேலெழுந்து மூலாதாரம் முதலாக சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுக்தி, ஆக்ஞை ஊடான ஆறு ஆதாரச் சக்கரங்களினூடாகச் சிரசு வரை மேல் நோக்கிப் பாய்ந்து சிவயோக அனுபவ நிலையை அருளி அதன் மூலமாகப் புதிய உணர்வை, பார்வையை, தெளிவை, தரிசனங்களை, விளக்கங்களைத் தருகின்றது. நாதம், பிந்து இணைந்த குண்டலினி சக்தி கீழ் நோக்கிச் செயற்படும் போது உலக வாழ்க்கையில் பாலியல் இன்பமாகப் பரிணமிக்கின்றது.
 
ஆண், பெண், அலி, பிறழ்பாற் சேர்க்கையாளர் என்று எம்மில் ஒவ்வொருவரிலும் ஏற்கெனவே இந்த நாதம் ஆண்மையாகவும், பிந்து பெண்மையாகவும் வெவ்வேறு விகிதத்தில் வெளிக்காட்டப்படுகின்றது. ஆணில் பெண்மையும் பெண்ணில் ஆண்மையும் கலந்துதான் காணப்படுகின்றது. இதையே சைவர்களாகிய நாம் ஆண் பாதி, பெண் பாதியான அர்த்த நாரீசுவர வடிவில் காண்கின்றோம். ஆண்களில் நாதம் கூடிய விகிதத்திலும் பிந்து குறைந்த விகிதத்திலும் தொழிற்படுகின்றது; பெண்களில் பிந்து கூடிய விகிதத்திலும் நாதம் குறைந்த விகிதத்திலும் தொழிற்படுகின்றது. அவ்வாறில்லாமல் மாறுபட்டுக் காணப்படும் நிலையில் அலிகளும், பிறழ் பாற் சேர்க்கையாளர்களும் வருகின்றார்கள். ஒவ்வொருவரும் தம்முள் உள்ள இந்த நாதம், பிந்து உந்துதல்களின் அகச்சமநிலையைப் பெறும் பொருட்டு புறத்தே பாலியல் நாட்டத்தை வெளிப்படுத்துகின்றார்கள். இது மிகச்சிறிய கண்ணுக்குத் தெரியாத பற்றீரியாக்கள் போன்ற நுண்ணுயிர்களில் இருந்து மனிதர் வரையுள்ள சிக்கலான உயிரினங்கள் வரை இவ்வுலகிற்கும் இக்காலத்திற்கும் மட்டுமன்றி, அண்ட சராசரங்கள் முழுமைக்கும், எக்காலத்துக்கும் பொருந்துகின்ற சாசுவதமான சைவ உண்மையாகும்.
 
சிவனுக்கு நான்கு வகையான சக்திகள் இருக்கின்றார்கள்.
                                                                                    
ஏகைவ சக்தி;பரமேச்வரஸ்ய
ப்ரயோஜநார்த்தாய சதுர்விதாபூத்
போகே பவாநீ புருஷேஷு விஷ்ணு
க்ரோதே ச காளீ ஸமரே ச துர்கா
-காளிதாசரின் குமார சம்பவம்
                                                                      
 
இறுதிசெய் திடலே சீற்றம் இன்பமே யாண்மை என்னா
அறைதரு சக்தி நான்காம்அரன்தனக் கையை காளி
முறைதரு கவுரி இன்னோர் மும்மையும் பெற்றோர் ஏனைப்
பெறலருஞ் சத்தியான்இப் பெற்றியும் மறைகள் பேசும்.
- கந்தபுராணம்
.
யோக நித்திரையில் உள்ள விஷ்ணு வலது பக்கம் சரிந்து படுத்திருந்து இடது நாசியில் சுவாசம் நடக்கும் படியாகத் தூங்குவதாலும், கஸ்தூரி சாந்து பூசுவதாலும் கூட அவர் சிவனின் சக்தி என்பது உணரப்படுகின்றது.
சிவன் தனது நான்கு சக்திகளில் புருஷ வடிவில் உள்ள சக்தியான திருமாலுடன் சேர்ந்த போது தோன்றியவரே ஐயனார் என்னும் மகாசாத்தா. இதைக் கந்தபுராணம் மகா சாத்தாப் படலத்திலே காணலாம்.
 
நால் வகைப்பட்ட நண்ணிய சக்தியுள்
மாலும் ஆதலின் மற்றது காட்டுவான்
ஆல கண்டத்தன் அச்சுதன் அச்சுறும்
கோலம் எய்திக் குறுகினன் அவ்விடை
 
இந்த வண்ணம் இருக்க முராரியும்
அந்தி வண்ணத்து அமலனும் ஆகியே
முந்து கூடி முயங்கிய எல்லையில்
வந்தனன் எமை வாழ்விக்கும் ஐயனே
 
மைக்கருங்கடல் மேனியும் வானுலாஞ்
செக்கர்மேனியுஞ் செண்டுறுகையுமாய்
உக்கிரமத்துடன் ஓர் மகன் சேர்தலும்
முக்கண் எந்தை முயக்கினை நீங்கினான்
 
அத்தகும் திரு மைந்தற்கு அரிகர
புத்திரன் எனும் நாமம் புனைந்து, பின்
ஒத்த பான்மை உருத்திரர் தம்மொடும்
வைத்து மிக்க வரம்பல நல்கியே
 
புவனம் ஈந்து, புவனத்து இறைவனை
அவனை நல்கி, அமரரும் மாதவர்
எவரும் ஏத்திடும் ஏற்றமும் நல்கினான்
சிவனது இன்னருள் செப்புதற் பாலதோ
- கந்த புராணம், மகா சாத்தாப்படலம்
 
இவ்வாறு சிவனே தம்மோடு ஒத்த உருத்திரர்களோடு ஒருவராக ஐயனாரை வைத்து, அவருக்கு என்று தனிப்புவனமும் ஈந்து, எல்லாவற்றுக்கும்மேலாக அவரை அமரர்களும், பெருந்தவம் செய்யும் முனிவர்களும் ஏத்தி, வணங்கித் துதிக்கும் பதமும் வழங்கினான் என்று கந்தபுராணம் கூறுகின்றது. இவரே சூரபத்மனுக்கு அஞ்சி தேவேந்திரனும் ஒழிந்திருந்த காலத்தில் இந்திராணிக்கு காவலாக நின்று அபயம் அழித்தவர்.
 
பையராவமளியானும் பரம்பொருள் முதலும் நல்கும்
ஐயனே ஓலம்! விண்ணோர்க்கும் ஆதியே ஓலம்! செண்டார்
கையனே ஓலம்! எங்கள் கடவளே ஓலம்! ஓலம்!
மெயெயனே ஓலம்! தொல்சீர் வீரனே! ஓலம்! ஓலம்!
 
ஆரணச்சுருதியோர் சார் அடலுருத்திரன் என்று ஏத்தும்
காரணக்கடவுள் ஓலம்! கடல் நிறத்து எந்தாய் ஓலம்!
பூரணைக்கு இறைவா ஓலம்! புட்கலை கணவா ஓலம்!
வாரணத்து இறைமேல் கொண்டு வரும் பிரான் ஓலம்!
-கந்தபுராணம், மகாகாளர் வரு படலம்
 
இவ்வாறு சிவனே அளித்த ஏற்றத்தைப் புரியாமல் ஐயனார் வழிபாட்டை மறுதலிக்கும் சைவர்கள் நிலை வருந்துதற்குரியது.
 
எட்டுத்திக்குகளிலும் திசைக்குப் பத்தாக உள்ள புவனங்கள் அவற்றுக்கு அதிபதிகளாயுள்ள உருத்திரர்களின் பெயரால் வழங்கப்பெறுகின்றன என்றும், அவ்வாறாக கிழக்குத்திசையில் உள்ள புவனங்களில் ஒன்று சாஸ்தா புவனம் என்றும் ஆகமங்கள் கூறும். இது பிரம்மலோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் போன்ற ஒன்றாகும்.
 
பெரியபுராணத்திலும்சேரமான் பெருமாள்திருக்கைலாயத்தில் சிவனுக்கு முன் அரங்கேற்றியதிருக்கைலாய உலாப்பாடல்களை சாத்தானார் திருப்பிடவூரில் வெளிப்படுத்தி அருளினார் என்று வருகின்றது. இந்த உலாப்பாடலே தமிழில் உள்ள முதலாவது உலாப்பாடலாகும். ஆதலால் இதைஆதியுலாஎன்றும் வழங்குவர். உலா என்பது வீதியில் பவனி வருகின்ற மன்னன் அல்லது தலைவனை எண் வகைப் பருவ வயதுகளில் உள்ள பெண்கள் கண்டு மோகிப்பதைக் கூறும் அகத்துறைத் தமிழ் இலக்கிய வகைகளில் ஒன்றாகும்.
 
சேரர் காவலர் விண்ணப்பஞ் செய்தவத் திருவுலாப் புறமன்று
சாரல் வெள்ளியால்கயிலையிற் கேட்டமா சாத்தனார் தரித்திந்தப்
பாரில் வேதியர் திருப்பிட வூர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கு
நாரவேலைசூ ழுலகினில் விளங்கிட நாட்டினார் நலத்தாலே
- பெரிய புராணம், வெள்ளானைச்சருக்கம்
 
சைவ ஆகமங்களிலும்சுப்பிரபேத ஆகமத்திலும், பூர்வகாரணாகமத்திலும், அம்சுமத் பேத ஆகமத்திலும்ஐயனாரைப் பற்றியும் அவருடைய உருவ லட்சணங்களைப்பற்றியும் பேசப்படுகின்றது. இதேபோல்சில்பரத்தினம், தீட்சேந்திரம்என்னும் ஆகம வழி நூல்களும் ஐயனாரைப்பற்றிய விபரங்கள் உள்ள நூல்களாகும்.    
 
இவ்வாறு சைவ நூல்களான ஆகமங்களும், சைவசித்தாந்தப் பெரும்பொருள் கூறும் கந்தபுராணமும் ஏற்றித்துதிக்கும் சிவ, விஷ்ணு, சக்தி அம்சமான ஹரிஹர புத்திரனான ஐயனார் உடைய அவதாரமே சேர நாட்டில் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தோன்றியமணிகண்டன் என்னும் ஐயப்பர்ஆவார் என்று சபரிமலைத் தல வரலாறு கூறுகின்றது.
 
ஆகவே ஐயப்பரின் வழிபாடானது சிவ வழிபாடும், விஷ்ணு வழிபாடும், சக்தி வழிபாடும் சங்கமிக்கும் ஒருங்கிணைந்த வழிபாடாகும். ஆகமச் சைவ நெறிக்கும், கந்தபுராணம் போன்ற சைவத்தமிழ் இலக்கியங்களுக்கும் அமைவான, இசைவான வழிபாடாகும். சைவர்களாகிய நாம் வீணான குழப்புரைகளை விட்டு குழப்பம் இல்லாமல், கலக்கம் இல்லாமல் . மனம் ஒன்றி வழிபட்டு ஐயப்பர் மூலமாகச் சிவ அனுக்கிரகத்தைப் பெற்று உய்வோமாக.
 
யாதொரு தெய்வம் கொண்டீர் அத் தெய்வமாகி ஆங்கே
மாதொரு பாகனார் தாம் வருவார்; மற்று அத் தெய்வமெல்லாம்
வேதனைப் படும், பிறக்கும், இறக்கும், மேல் வினையும் செய்யும்;
ஆதலால் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே.
- சிவஞானசித்தியார் சுபக்கம் 115
ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர் விட்டுளன் எங்கள் சோதி
மாதுக்கம் நீங்க லுறுவீர் மனம் பற்றி வாழ்மின்
சாதுக்கள் மிக்கீர் இறையே வந்து சேர்மின்களே
- சம்பந்தர் தேவாரம்.
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

Category
Home | About Us | Contact Us