inner page header

HINDUISM AS IT IS

 

புட்ப விதியும் விலக்கும்

பஞ்சகோசங்கள்

தசவாயுக்களும்

பெருஞ்சாந்தி

சுத்தாத்துவிதசைவசித்தாந்திகளும்

மறக்கொணா இருவர்

மணிவாசக அணியமுதம்

புதிய சைவ வினாவிடை

அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும்.

சைவ மரபில் ஐயப்பன்

சரஸ்வதியந்தாதி

இந்து தர்மம்

அன்பே சிவம் ஆவது எப்படி

அன்னம் பாலிக்கும்

ஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்

ஆசமனம்- சைவ சித்தாந்தமே!

ஆத்மஜோதி எனது அறிமுகம்.......

ஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்

சிலந்தி அரசனான வரலாறு

சேவலும், மயிலும்!

பஞ்சாங்கம்

புராணக்கதைகள் புனை கதையா?

சைவம் எதிர்கொள்ளும் சவால்கள்

சிவ ரகசியம்

தலபுராண வரலாற்று உண்மைகள்

தலபுராண வரலாற்றுச் சான்றுகள்

தாவரங்கள் விலங்குகளுக்கும் நற்கதி

கலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்

காயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்

விபூதி தரிக்கும் காலம்

விபூதி அணியும் முறை

சிவராத்திரி வகைகள்

நல்ல சோதிடர் யார்

சோதிடமும் பிராயச்சித்தமும்

தசாங்கம்

சைவத்தில் சோதிடம்

தீர்த்தம்

ஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா?

உலக முடிவு 2012 இலா?

முத்திகள் பலவிதம்!

அஞ்சவத்தை

ஆரியமாயையின் தோற்றமும் வளர்ச்சியும்

கடவுளை அறிவது எப்படி?

சிவ யோகம்

பஞ்சப் பிரளயங்கள்

திதி

தமிழ் மாதங்கள்

தீபாவளித் திருநாள்

வருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்

எமது புத்தாண்டு எப்போது?

தமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்

தமிழ்ப் புத்தாண்டு

வேதம் அனைவருக்கும் பொது

அடியார் நிந்தை அரன் நிந்தையே!

நாலு வாக்கு

சிவஞானசித்தியார்

சாங்கோபாங்கம்

இறைவனுடைய சரீரங்கள்

புராணங்கள் பொய்யா?

மகேந்திர மலை

அக்கினிஹோத்திரம்

கடவுள் உண்டா? இல்லையா?

காலச் சக்கரம்

நாம் தமிழர்

பஞ்ச ஆசௌசங்கள்

அப்துல் கலாமும் யாழ்ப்பாணமும்

தமிழ் மரபில் மரணச் சடங்குகள்

 

 

 

 

Home
புதிய சைவ வினாவிடை unicode Written by Administrator   
Created On: DATE_FORMAT_LC5
PDF Print E-mail
   
   

 

புதிய சைவ வினாவிடை

குருவடி பணிந்து

வைத்திய கலாநிதி இ. லம்போதரன் MD

www.knowingourroots.com

  1. எமது கடவுள் யார்?

இந்த உலகத்துக்குக் காரணமான கடவுள் ஒருவரே. வெவ்வேறு மதத்தவர்கள் கூறும் ஒவ்வொரு கடவுளும் வானிலே தத்தமக்கென்று தனித்தனி இடம் பிடித்துக்கொண்டு இருப்பதில்லை. கடவுளுக்கு நாம ரூபங்கள் கிடையாது. நாம ரூபமற்ற இந்த ஒப்பற்ற இறையைச் சைவம் பரசிவம் என்ற பெயரால் கூறுகின்றது. வேதங்கள் இதையே பரப்பிரம்மம் என்று வழங்குகின்றன. உபநிடதங்கள் இதை தத் அல்லது அது என்று சொல்லுகின்றன. நாம ரூபமற்ற ஒப்பற்ற இந்த இறை எம்மீதுள்ள அளப்பருங் கருணையால் பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்துகின்றது. பெயர், உருவம் இல்லாத இந்த இறை எமக்காக பெயர், உருவம் தாங்கி வெளிப்படும் நிலையை நாம் சிவன் என்று சைவத்தில் அழைக்கின்றோம்.இதுவே நாம் காணும் காரியங்களுக்கெல்லாம் மூல காரணம்; கர்த்தா. இதையே யெஹோவா என்றும், பிதா என்றும், அல்லா என்றும், அஹுரத் மஸ்டா என்றும், ஒன்றும் இல்லாத சூனியம் என்றும் வெவ்வேறு மதத்தவர்கள் தத்தமக்கு வெளிப்படுத்தப்பட்டவாறும், புரிந்தவாறும் அழைகின்றார்கள். அவ்வளவுதான்.

ஆதாரம் 1: அகளமாய் யாரும் அறிவரிது அப்பொருள்

                  சகளமாய் வந்ததுஎன்று உந்தீபற

                  தானாகத் தந்ததுஎன்று உந்தீபற

-         திருவுந்தியார்-1, மெய்கண்ட சாத்திரம்

அகளம் – உருவற்றது; சகளம் – உருவமுள்ளது

ஆதாரம் 2: ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றுமில்லாதானுக்கு ஆயிரம்

                  திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ

-         திருவாசகம்

ஆதாரம் 3: ஏகம் சத் விப்ரதீம் பஹூதா வதந்தீம்

                  உள்ளது ஒன்றே; அதுவே பலவாறாகப் பேசப்படுகின்றது.

-இருக்கு வேதம்

ஆதாரம் 4: இந்துக்களின் பிரம்மான், சொரஸ்தியர்களின் அஹூரத் மஸ்டா, முஸ்லிம்களின் அல்லா, யூதர்களின் யெஹோவா, கிறிஸ்தவர்களின் பரலோகத்தில் இருக்கின்ற பிதா என்று பலவாறாக அழைக்கப்படுகின்ற ஒரே இறை உங்களுக்கு சாந்தியையும், சமாதானத்தையும் அளிக்கட்டும்.

-         சுவாமி விவேகானந்தரின் முதலாவது சிக்காகோ பேருரை

ஆதாரம் 5: அறுவகைச் சமயத்தோர்க்கும் அவ்வவர் பொருளாய்

-         சிவஞானசித்தியார்– 2

ஆதாரம் 6: சிவன் அரு உருவும் அல்லன்; சித்தினோடு அசித்தும்  

                 அல்லன் பவமுதல் தொழில்கள் ஒன்றும் பண்ணிடு வானும்      

                 அல்லன்; தவம்முதல் யோக போகம் தரிப்பவன் அல்லன்;   

                  தானே  இவைபெற இயைந்தும், ஒன்றும் இயைந்திடா  

                                                                             இயல்பி னானே.

-         சிவஞானசித்தியார் – 90

ஆதாரம் 7. யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே

மாதொரு பாக னார்தாம் வருவர்மற்றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ்செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே.

-         சிவஞானசித்தியார் - 115

  1. எமது சமயத்தில் கடவுளுக்கும் மனைவி இருப்பது ஏன் என்று விளக்குவீர்களா?

கடவுள் ஒருவரே. அக்கடவுளின் அளப்பருங் கருணையை நாம் அவரின் சக்தி என்று வணங்குகின்றோம். இறைவனும் அவன் சக்தியும் சூரியனும் அதன் கதிர்களும்போல ஒன்றிலிருந்தொன்று பிரிப்பற்றவை. கடவுளின் பிரிக்க முடியாத சக்தியையே சைவம் கடவுளின் மனைவியாகக் காண்கின்றது. இதுவே உலகப் படைப்பெங்கிலும் நாம் காணும் ஆண், பெண் வேறுபாட்டுக்குக் காரணம். உலகில் ஆண் பெண் படைப்புகள் எப்படிச் செயற்படுகின்றன என்று விஞ்ஞானம் கூறும்; ஆனால் ஏன் என்ற கேள்விக்கு விடை எமது சமயத்திலேயே உள்ளது. உயிருள்ள படைப்புகள் மட்டுமல்ல உயிரற்ற சடப்பொருட்களின் அணுக்களிலும், சட சக்திகளான மின் சக்தி, அணு சக்தி போன்றவைகளிலும்கூட இவ்வாறே நேர் எதிர் முனைப்புகளாகவே தொழிற்படுவதற்கும் இவற்றின் படைப்புகளுக்கெல்லாம் காரணமான இறையின் சிவ சக்தி என்னும் ஆண்-பெண் இயல்பே காரணம். படைப்புகள் எல்லாவற்றிலும் இவ்வாறு நீக்கமற நிறைந்து தொடர்ந்தேர்ச்சியாக தொழிற்பட்டுக்கொண்டிருக்கும் இறையின் இரு முனைப்பான உண்மையைச் சிவ நடனமாகவும், அர்த்தநாரீஸ்வர வடிவமாகவும், கணவன் மனைவியான ஆண் பெண் தெய்வமாகவும் சைவம் பார்க்கின்றது. இதே உண்மை விஞ்ஞானிகளாலும், வெவ்வேறு சமயங்களினாலும், வெவ்வேறு மக்களாலும்வெவ்வேறு காலங்களில், வெவ்வேறு மட்டங்களில் புரிந்து கொள்ளப்படுகின்றது; உணர்ந்து கொள்ளப்படுகின்றது; வெளிப்படுத்தப்படுகின்றது. ஜெனீவாவில் உள்ள ஐரோபிய அணு ஆராய்ச்சி மையத்தில் (CERN- Centre For Nuclear Research in Europe) 2004 இல் இரண்டு மீட்டர் உயரமான நடராஜர் சிலை தாபிக்கப்பட்டதன் பின்ணணி இதுவே.ஃபிறிட்ஜொஃப் கப்ரா என்னும் பௌதிகவியல் விஞ்ஞானியின்  விஞ்ஞானத்தை மெஞ்ஞானத்துடன் இணைக்கும் அற்புதமான தாவோ ஒஃப் பிசிக்ஸ் (Tao of Physics: An Exploration of the Parallels Between Modern Physics and Eastern Mysticism) என்னும்புத்தகத்தின் உள்ளடக்கமும் இதன் ஒரு பகுதியே.

Tao of Physics: An Exploration of the Parallels Between Modern Physics and Eastern Mysticism is a book by physicistFritjof Capra, published in 1975 by ShambhalaPublications of Berkeley, California. It was a bestseller in the United States, and has been published in 43 editions in 23 languages. The fourth edition in English was published in 2000

ஆதாரம் 1. தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தரும் சத்தி

                 பின்னமிலான் எங்கள் பிரான்.

-         திருவருட்பயன்- 2

பின்னமிலான் - பிரிப்பின்றியவன்

ஆதாரம் 2. அருளது சத்தி யாகும் அரன்தனக் கருளை யின்றித்
                 தெருள்சிவ மில்லை அந்தச்சிவமின்றிச் சத்தி யில்லை
                 மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க்

                                                                     களிப்பன்கண்கட்(கு)
                 இருளினை ஒளியா லோட்டும் இரவியைப் போல ஈசன்.

-          சிவஞானசித்தியார்-239

ஆதாரம் 3. தென்பால் உகந்தாடும் தில்லைச் சிற்றம்பலவன்

                  பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ

                  பெண்பால் உகந்திலனேல் பேதாய் இருநிலத்தோர்

                  விண்பால் யோகெய்தி வீடுவர்காண் சாழலோ

-         திருவாசகம்

ஆதாரம் 4. சத்தியும் சிவமும் ஆய தன்மை, இவ் உலகம் எல்லாம்

                  ஒத்துஒவ்வா ஆணும் பெண்ணுமாக, உயர்குண குணியும்

                 ஆகி வைத்தனன்; அவளால் வந்த ஆக்கம், இவ் வாழ்க்கை

                 எல்லாம்  இத்தையும் அறியார், பீட லிங்கத்தின் இயல்பும்  

                                                                                                ஓரார்.

-சிவஞானசித்தியார் 89

  1. எமது சில தெய்வங்களுக்கு பல மனைவிகள் உள்ளார்களே; இது ஏன் என்று விளக்க முடியுமா?

கடவுள்  ஒருவரே; அவரின் அருளையும் வல்லமையையும் நாம் அவரில் பிரிவின்றி நிற்கும் சக்தியாக, மனைவியாக வழிபடுகின்றோம். அவரின் பல வகைப்பட்ட ஆற்றல்களையும் பல்வேறு பட்ட சக்திகளாக, ஒன்றுக்கு மேற்பட்ட பல மனைவியராகவும் கொண்டு வழிபடும் மரபும் எமது சமயத்தில் உள்ளது. உதாரணமாக முருகக் கடவுளை எடுத்துக்கொள்வோம். அவருடைய அளப்பற்ற இச்சா சக்தியை (volitional potency) நாம் வள்ளியாகவும், அவருடைய அளப்பற்ற கிரியா சக்தியை (connative potency) நாம் தெய்வானையாகவும் வழிபடும் நாம் அவருடைய அளப்பற்ற ஞானாசக்தியை (cognitive potency) வேலாக வழிபடுகின்றோம்.

ஆதாரம்1. வள்ளி – இச்சா சக்தி; தெய்வயானை – கிரியா சக்தி; வேல் –

                 ஞானா சக்தி

-         கந்தபுராணவிளக்கம்

ஆதாரம் 2: சத்தியாய் விந்து சத்தி யாய் மனோன் மணிதானாகி

                  ஒத்துறும் மகேசையாகி உயர் திரு வாணியாகி

                 வைத்துறும் சிவாதிக்கு இங்ஙன் வரும் சத்தி ஒருத்தி ஆகும்

                எத்திறம் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள்.

-சிவஞானசித்தியார் -165

ஆதாரம் 3: சத்திதான் பலவோ? என்னில் தான் ஒன்றே; அநேகமாக

                  வைத்திடும் காரியத்தால்; மந்திரி ஆதிக்கு எல்லாம்

                 உய்த்திடும் ஒருவன் சத்திபோல் அரனுடையதாகி;

                 புத்தி முத்திகளை எல்லாம் புரிந்து அவன் நினைந்த வாறாம்.

-         சிவஞானசித்தியார் - 81

ஆதாரம் 4: சத்திதன் வடிவு ஏது? என்னில் தடையிலா ஞான மாகும்

                  உய்த்திடும் இச்சை செய்தி இவை ஞானத்து உளவோ?

                  என்னில் எத்திறம் ஞானம் உள்ளது அத்திறம் இச்சை

                  செய்தி வைத்தலால் மறைப்பு இல்ஞானால் மருவிடும்

                                                                           கிரியை எல்லாம்.

-         சிவஞானசித்தியார் - 82

  1. எமது சமயத்தில் கடவுளுக்கு பல உருவங்கள் உள்ளனவே? இவற்றை விளக்க முடியுமா?

கடவுள் நாம ரூபமற்றவர். அவர் எம்மீது கொண்ட கருணையால் அண்ட சராசரத்தின் பல இடங்களில், கோடிக்கணக்கான யுகங்களின் பல காலங்களில் பல்வேறு விதமாக வெளிப்பட்டுள்ளார்; வெளிப்படுகின்றார்; வெளிப்படுவார். சிவயோகத்தில் திளைத்து தமது ஆன்மாவின் நாம, ரூப, உடல் மற்றும் காலம் போன்ற கட்டுகளிலிருந்து வெளியேறி இவை கடந்த தமது ஆன்மாவின் சர்வ வியாபகத்தன்மையில் அனுபவபூர்வமாகத் திளைப்பவர்களுக்கு இவை யாவும் புலன் கடந்த யோகக்காட்சியாகப் புலனாகும். இவ்வாறு புலப்படும் வடிவங்களையும், சம்பவங்களையும் அவர்கள் பாடல்களாகவும் தியான சுலோகங்களாகவும், புராணங்களாகவும் சொன்னார்கள். இவற்றை நாம் சிற்பங்களாகவும், ஓவியங்களாகவும், வழிபாட்டுக்குரிய தெய்வ மூர்த்தங்களாகவும் வடித்துள்ளோம். இவையே நாம் எமது சமயத்தில் காணும் பல்வேறு பட்ட தெய்வ வடிவங்களாம்.

ஒப்பற்ற இறையின் ஒன்பது இறை வடிவங்களாக உருவமற்ற அருவ நிலையில் உள்ள சிவம், சக்தி, நாதம், பிந்து  என்பவற்றையும், உருவமற்ற இறையின் உணரக்கூடிய முதல் வெளிப்பாடாக அருவுருவத்திருமேனியான சதாசிவ மூர்த்தமான சிவலிங்கத்தையும்,உருவ வெளிப்பாடுகளாக மகேஸ்வரன், பிரம்மன், திருமால், உருத்திரன் என்பவர்களையும் நவந்தரு பேதங்கள் என்று சிவஞானசித்தியார் கூறுகின்றது.

மகேஸ்வர மூர்த்தத்தின் தட்சணாமூர்த்தி, சந்திரசேகரர், நடராஜர், சோமாஸ்கந்தர் போன்ற பல்வேறுபட்ட வெளிப்பாடுகளை இருபத்தைந்தாகவும், அறுபத்து நான்காகவும் ஆகமங்களும், சிற்ப நூல்களும் கூறுகின்றன.

இறை இவ்வடிவங்களை எடுக்கும் தருணங்களில் இறையின் பிரிப்பின்றிய சக்தியும் மனைவியாகவும், பிள்ளைகளாகவும் பல்வேறு விதங்களில் வெளிப்படுகின்றது. இறைக்கு அணுக்கமாக இருந்து அனுபவிக்கும் பேறு பெற்ற பல்வேறு தேவர்களும், கணங்களும்கூட இக்காலங்களில் பல்வேறுவிதமாக வெளிப்படுவதுண்டு. இவையே எமது சமயத்தில் நாம் காணும் சக்தி, விநாயகர், முருகன் போன்ற தெய்வ வடிவங்களும், நந்தி, கருடன், துவார பாலகர் போன்ற தேவ வடிவங்களுமாம்.

ஆதாரம் 1. ......................................சமாதியான் மலங்கள் வாட்டிப்
                 பொருந்திய தேச கால இயல்பு அகல் பொருள்கள் எல்லாம்
                 இருந்து உணர்கின்ற ஞானம் யோகநற் காண்டலாமே.

                                             -சிவஞான சித்தியார் 13

ஆதாரம் 2.  காணாத அருவுக்கும் உருவுக்கும் காரணமாய்

                   நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாஞ் சிவலிங்கம்

-         பெரியபுராணம்- 3648

ஆதாரம் 3. உருமேனி தரித்துக் கொண்டது என்றலும் உரு இறந்த

                 அருமேனி அதுவும் கண்டோம் அருவுரு ஆனபோது

                 திருமேனி உபயம் பெற்றோம் செப்பிய மூன்றும் நந்தம்

                கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு காணே.

-         சிவஞானசித்தியார்- 75

ஆதாரம் 4. சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன்

                  உவந்து அருள் உருத்திரன் தான் மால் அயன் ஒன்றின்

                 ஒன்றாய்ப் பவம் தரும் அருவ நால் இங்கு உருவநால்

                 உபயம் ஒன்றாம் நவந் தரு பேதமாக ஏக நாதனே நடிப்பன்

                                                                                                என்பர்.

-         சிவஞானசித்தியார் -164

ஆதாரம் 5. சிவன்முதல் மூவரோடு ஐவர் சிறந்த

                 அவைமுதல் ஆறிரண்டு ஒன்றோடு ஒன்றாகும்

                அவைமுதல் விந்துவும் நாதமும் ஓங்கச்

                சவைமுதற் சங்கரன் தன்பெயர் தானே

-         திருமந்திரம் - 106

ஆதாரம் 6. மகேசுர வடிவம் எத்தனை?

                  சந்திரசேகரர், உமாமகேசர், இடபாரூடர்,    

                 சபாபதி(நடராஜர்),கல்யாணசுந்தரர், பிட்சாடனர், காமாரி,  

                 காலாரி, திரிபுராரி, சலந்தராரி, மாதங்காரி, வீரபத்திரர்,  

                  ஹரியர்த்தர்(சங்கரநாராயணர்), அர்த்தநாரீசுரர், கிராதர்,

                 கங்காளர்,  சண்டேசாநுக்கிரர், நீலகண்டர், சக்கரப்பிரதர்,  

                 கசமுகாநுக்கிரகர்,  சோமாஸ்கந்தர், ஏகபாதர், சுகாசனர்,  

                தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர் என்னும்      

                 இருபத்தைந்துமாம்.

-         ஆறுமுகநாவலரின் 2ம்சைவவினாவிடை, 23

ஆதாரம் 7. உருவு பல கொண்டு உணர்வரிதாய் நிற்கும் ஒருவன்

-         கயிலை பாதி காளத்தி பாதி திருவந்தாதி, 11ம் திருமுறை

  1. எமது சமயத்தில் பல கடவுள்களை வணங்குகின்றோமே; இது ஏன்?

நாம் பலதெய்வக் கோட்பாட்டுக்காரர் அல்ல; ஒரே தெய்வத்தின் பல்வேறு அம்சங்களையே பல வடிவங்களில் வழிபடுகின்றோம். நாம ரூபமில்லாத இறையை நாம் உணர முடியும் முதல் வெளிப்பாடு அருவுருவத் திருமேனியான சிவலிங்கம். இது மற்றைய இறை வடிவங்களுக்கெல்லாம் முதன்மையான வடிவமாக அமைவதனாலேயே நாம் சிவலிங்க வடிவத்தை மூலத்தானத்தில் அல்லாது பரிவார மூர்த்தமாகப் பிரதிஷ்டை செய்வதற்கு ஆகம விதிகள் இடந்தருவதில்லை. படைத்தல் தொடர்பான இறை வெளிப்பாடு பிரம்மன்; அப்போது இறை சக்தி சரஸ்வதி. காத்தல் தொடர்பான இறை வெளிப்பாடு திருமால்; அப்போது இறை சக்தி இலட்சுமி. அழித்தல் தொடர்பான இறை வெளிப்பாடு உருத்திரன்; அப்போது இறை சக்தி ரௌத்திரி. மறைத்தல் தொடர்பான இறை வெளிப்பாடு மகேஸ்வரன்; அப்போது இறை சக்தி மகேஸ்வரி. அருளல் தொடர்பான இறை வெளிப்பாடு சதாசிவன்; அப்போது இறை சக்தி மனோன்மணி. இறை முருகனாக வெளிப்படும்போது இறைசக்தி வள்ளியாகவும், தெய்வயானையாகவும், அவர் திருக்கரத்திலுள்ள வேலாகவும் வெளிப்படுகின்றது.

ஆதாரம் 1. நாரணன்காண் நான்முகன்காண் நால்வே தன்காண்

                  ஞானப்பெருங் கடற்கோர் நாவாய் அன்ன

                  பூரணன்காண் புண்ணியன்காண் புராணன் தான்காண்

-         திருநாவுக்கரசர் தேவாரம் - 6:8:3

ஆதாரம் 2. ஆதிப் பிரானும் அணிமணி வண்ணனும்

                  ஆதிக் கமலத் தலர்மிசை யானும்

                 சோதிக்கில் மூன்றுந் தொடர்ச்சியில் ஒன்றெனார்

                 பேதித்து உலகம் பிணங்கு கின்றார்களே

-திருமந்திரம் - 104

ஆதாரம் 3. பரத்திலே ஒன்றாய்உள் ளாய்ப்புறமாகி

                 வரத்தினுள் மாயவ னாய்அயன் ஆகித்

                 தரத்தினுள் தான்பல தன்மையன் ஆகிக்

                கரத்தினுள் நின்று கழிவு செய்தானே

-         திருமந்திரம் – 111

  1. எமது சமயத்தில் உணர்வற்ற சடப்பொருட்களான நிலம், நீர் போன்றவற்றையும், சூரியன் சந்திரன் போன்றவற்றையும்கூட வழிபடுகின்றோமே; இவற்றுக்கு உயிரும் இல்லை; உணர்வும் இல்லை; இது ஏன்? இந்த சடப்பொருட்களுக்கும், மரங்களுக்கும், பசு போன்ற விலங்குகளுக்கும் நாம் செய்யும் வழிபாடு எவ்வாறு பலனளிக்கும்?

சிற்றறிவுடைய உயிரினங்களும், உயிரும் உணர்வும் அற்ற சடப்பொருட்களான நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்களும், சூரிய சந்திரக் கோளங்களும் கடவுள் ஆகா. ஆனால் கண்ணுக்கும், புலனுக்கும் புலப்படாத இறை இந்த எட்டு இடங்களிலும் நமக்கு வெளிப்பட்டு நிற்கின்றது. ஒவ்வொரு ஆன்மாவிலும் ஆன்மாவின் நாதனாக, தலைவனாக, இயமானனாக இறைவன் உறைகின்றான்.  இறையின் இந்த எட்டு வெளிப்பாடுகளையும் சைவமானது அட்ட மூர்த்தங்கள் என்று கூறுகின்றது. நாம் இவற்றுக்குச் செய்யும் வழிபாடு வெறும் சடத்துக்கோ அல்லது சிற்றறிவுடைய உயிர்களுக்கோ அல்ல; இவற்றினுள்ளே வெளிப்பட்டு நிற்கும் ஒப்பற்ற இறையுக்கேயாம்.

ஆதாரம் 1. மண்ணோடு நீர் அனல் காலோடு ஆகாய மதி இரவி

                  எண்ணில் வரும் இயமானன்

-         திருஞானசம்பந்தர் தேவாரம் - 2:184:3

கால் – காற்று

ஆதாரம் 2. இருநிலனாய்த் தீயாகி நீருமாகி

                  இயமானனாய் எறியும் காற்று மாகி

                  அருநிலைய திங்களாய் ஞாயி றாகி

                  ஆகாசமாய் அட்ட மூர்த்தியாகி

-         திருநாவுக்கரசர் தேவாரம் - 6:94:1

ஆதாரம் 3. எண்வகை மூர்த்திஎன்பதிவ் வுலகினில்
                  உண்மை யானென உணர்த்திய வாறே

-         திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது, 11ம் திருமுறை

ஆதாரம் 4. பசுவைத் தொழுதாலும், பாலைத் தொழுதாலும், மரத்தைத்

                 தொழுதாலும், மலரைத் தொழுதாலும், எங்கும் எல்லா  

                  உயிர்களிலும் உள்ள என்னைத் தொழுதாலும் அந்த யோகி

                  எப்போதும் என் பக்கமே இருக்கிறான்.

-         பகவத்கீதை - 6:31

ஆதாரம் 5. இங்குநாம் சிலர்க்குப் பூசை இயற்றினால்

                 இவர்களோவந்(து)  அங்குவான் தருவார்? அன்றேல்

                 அத்தெய்வம் அத்த னைக்காண்; எங்கும்வாழ்

                 தெய்வமெல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது;
                 அங்குநாம் செய்யுஞ் செய்திக்கு ஆணைவைப் பால்

                                                                                அளிப்பன்.

-சிவஞானசித்தியார் -116

 

ஆதாரம் 6. அங்கதி ரோன் அவனை அண்ணலாக் கருத வேண்டா
                   வெங்கதி ரோன்வ ழியே போவதற்கு அமைந்துகொண்மின்
                  அங்கதி ரோன் அவனை உடன்வைத்த ஆதி மூர்த்தி
                  செங்கதி ரோன்வ ணங்குந்திருச்சோற்றுத் துறைய னாரே.

-         திருநாவுக்கரசர் தேவாரம் - 4:41:8

ஆதாரம் 7. நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்

                 சீரார் சுடர்கள் இரண்டாய்ச் சிவனாய் அயனானாய்'

- வைணவ திவ்விய பிரபந்தம்,நம்மாழ்வார் 9ம் திருமொழி

கால் – காற்று; சுடர்கள் இரண்டு – சூரிய சந்திரர்கள்

  1. நாங்கள் விக்கிரக ஆராதனைக்காரர் என்று மற்றச் சமயத்தவர் குற்றம் கூறுகின்றார்களே; இது சரியா?

நாங்கள் வெற்றுச்சிலைகளைக் கடவுளாக வழிபடும் விக்கிரக ஆராதனைக்காரர் அல்ல. ஒரே கடவுளின் வெவ்வேறு வடிவங்களை நாம் சிலைகளாகவும், சித்திரங்களாகவும், வழிபடும்போது நாம் அந்த சிலையில் அல்லது உருவப்படத்தில் எல்லாம் வல்ல இறையை வந்து எழுந்தருளியிருந்து எமது வழிபாட்டை ஏற்கும்படி வழிபாட்டின் தொடக்கத்தில் வரவழைக்கின்றோம். இதை ஆவாஹனம் என்று கூறுவர். வழிபாட்டின் இறுதியில் இறையை மீண்டும் வழியனுப்பி வைக்கின்றோம். இதை யதாஸ்தான பிரதிஷ்டானம் என்பர். விநாயக சதுர்த்தியிலும், நவராத்திரியிலும், வீட்டில் வழிபாடுகளிலும் இவ்வாறு இவற்றுக்கென்றே செய்யப்பட்டு வழிபடும் மட்சிலைகளையும், சாணியினால் அல்லது மஞ்சளினால் செய்யப்பட்ட உருவங்களையும்விழா அல்லது வழிபாடு முடிந்தவுடன் சமுத்திரத்திலோ, ஆற்றிலோ அல்லது குளத்திலோ  நீரில் கரைத்து விடுவார்கள். இதை விஸர்ஜனம் என்பார்கள். நமக்கு இங்கெல்லாம் சிலைகளும், உருவப்படங்களும் கண்ணுக்கும், கருத்துக்கும் எட்டாத ஒப்பற்ற இறையை எமக்கு நெருக்கமாக்கி, அணுக்கமாக்கி, உறவாடிக் கொண்டாடி வழிபடும் ஊடகங்களேயாம். அவை வெறுமனே கடவுளாகா. எல்லா சடப்பொருட்களையும் போல அவையும் தேய்வுக்கும், சிதைவுக்கும், அழிவுக்கும் ஏன் திருட்டுக்கும் கூட உள்ளாகக்கூடிய சடப்பொருட்களே.

ஆதாரம் 1. ஏஹி அச்மானம் ஆதிஷ்ட அச்மாபவது தே தநூ

                  சுவாமி வாரும்! இந்தக் கற்சிலையில் நில்லும். இந்தக்

                  கற்சிலையே உமக்குச் சரீரம்ஆகுவதாக.

-அதர்வ வேதம் 1ம் காண்டம், 2ம் கற்பகம், 3ம் துவனி

ஆதாரம் 2. திருக்கோயில் உள்ளிருக்கும் திருமேனி தன்னைச்

                 சிவன் எனவே கண்டவர்க்குச் சிவன் உறைவன் அங்கே

                 உருக்கோலி மந்திரத்தால் எனநினையும் அவர்க்கும்

                 உளன் எங்கும் இலன் இங்கும் உளன் என்பார்க்கும்

                 விருப்பாய வடிவாகி இந்தனத்தின் எரிபோல்

                 மந்திரத்தில் வந்து உதித்து மிகும் சுரபிக்கு  எங்கும்

                 உருக்காண ஒண்ணாத பால்முலைப்பால் விம்மி

                ஒழுகுவதுபோல் வெளிப்பட்டு அருளுவன் அன்பர்க்கே.

-         சிவஞானசித்தியார் - 325

இந்தனம் – விறகு; சுரபி - பசு

ஆதாரம் 3. இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே

                  எங்களை ஆண்டு கொண்டு இன்னருள் புரியும்

-         திருவாசகம்

ஆதாரம் 4. எவ்வுருவில் யாரொருவர் உள்குவர் உள்ளத்துள்

                 அவ்வுருவாய்த் தோன்றி அருள்கொடுப்பான் – எவ்வுருவும்

                  தானேயாய் நின்றளிப்பான்

-         திருக்கைலாய ஞான உலா, 11ம் திருமுறை

  1. சைவத்தை   மும்மூர்த்திகளில்  ஒருவரான சிவனை வழிபடும் சமயம் என்று சிலர் விளங்கிக்கொள்கின்றார்கள்; இது சரியான விளக்கமா?

எமது சமயத்தில் மும்மூர்த்திகளாக படைப்புக் கடவுளான பிரம்மாவும், காத்தல் கடவுளான திருமாலும், அழித்தல் கடவுளான உருத்திரனும் உள்ளனர்.  இந்த உருத்திரனுக்குச் சிவன் என்ற பெயரும் உண்டு.இவர்கள் மூவரையும் இத் தொழில்களில் அதிகாரம் கொடுத்துச் செயற்படுத்துவது இம் மூவருக்கும் மேலான முழுமுதற் கடவுளே. இதைச் சிவன் என்று சைவம் கூறுகின்றது. உயர்ந்த ஆன்மாக்களான இந்த பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களுக்கும் தோற்றம், நிலைப்பு, முடிவு உண்டு. இந்தப் பிரகிருதிக்கு உட்பட்ட இவர்களுக்கு பிரகிருதியின் முக்குண தோஷங்களும் உண்டு. இவர்களை அணு பட்ச பிரம்மா, அணு பட்ச விஷ்ணு, அணு பட்ச உருத்திரன் என்று எமது சமயம் கூறும்.அணு என்பது ஆன்மாக்கள் என்பதைக் குறிக்கும்.

இந்த பிரம்மாவுக்கு நமது 432 கோடி வருடங்கள் அரை நாட் பொழுதாகும். இவ்விதமாக அவருக்கு ஆயுட்காலம் அவருடைய ஆண்டுக் கணக்கில் நூறு வருடங்கள், நமது கணக்கில் மூன்று இலட்சத்துப் பதினோராயிரத்து நாற்பது ட்ரில்லியன் வருடங்கள். இப்போது அவருக்கு அவருடைய கணக்கில் ஐம்பது வயது முடிந்து ஐம்பத்தோராவது வருடத்தில் முதலாவது மாதம், முதலாவது நாள் நடக்கின்றது. இவருடைய ஒரு நாட் பொழுதில் இருபத்து நான்கு இந்திரர்கள் வந்து, இருந்து, இறந்து போவார்கள். இப்போது இருக்கும் இந்திரனை அடுத்து இந்திர பதவிக்கு வரப்போவது மகாபலி என்றும் இப்போது இருக்கும் பிரம்மாவின் ஆயுள் முடிய அடுத்த பிரம்ம பதவிக்கு வர இருப்பவர் ஆஞ்சனேயர் என்றும் பவிஷ்ய புராணம் கூறுகின்றது. இந்த ஆஞ்சனேயர் முன்னர் பதினொரு உருத்திரர்களில் ஒருவராக இருந்தவர் என்றும் இது கூறுகின்றது.

இந்த பிரம்மாவின் நூறு வருடங்கள் விஷ்ணுவுக்கு ஒரு நாள். இவ்விதமாக அவருக்கும் அவருடைய கணக்கில் நூறு வருட காலம் ஆயுள் உண்டு. இந்த விஷ்ணுவின் நூறு வருடங்கள் உருத்திரனுக்கு ஒரு நாள், இப்படியே உருத்திரனுக்கும் அவருடைய கணக்கில் ஆயுள் நூறு வருடங்கள் என்று சிவமகாபுராணம் கூறுகின்றது. இப்படி கோடிக்கணக்கான பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்கள் வந்து போய்விட்டார்கள். இந்த காலக்கணக்குகளுக்கு அப்பாற்பட்டு தொடக்கம், நடு, முடிவு இல்லாமல் இருப்பது முழுமுதற்கடவுளான இறை. இதையே சைவம் சிவம் என்று கூறுகின்றது.

இந்த முழுமுதற்கடவுளான சிவமே பிரகிருதிக்கும் அதன் முக்குண தோஷங்களுக்கும் அப்பாற்பட்டு பிரம்ம, விஷ்ணு, உருத்திர வடிவந் தாங்கும்போது அம்மூர்த்தங்கள் சம்பு பட்ச பிரம்மா, சம்பு பட்ச விஷ்ணு, சம்பு பட்ச உருத்திரன் எனப்படுகின்றன. இவை முழுமுதற் கடவுளான சிவனின் ஒன்பது விதமான நவந்தரு பேத வடிவங்களில் அடங்குகின்றன.

ஆகவே சைவத்தில் நாம் வணங்கும் சிவன் மும்மூர்த்திகளில் ஒருவரான சிவன் அல்ல; மும்மூர்த்திகளுக்கும் ஜனனி முதலான சிவசத்திகளைப் பதிய வைத்தலால் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து நடாத்தும் முழுமுதற் கடவுளாகிய சிவனே.

ஆதாரம் 1. அயன் தனை ஆதி ஆகம் அரன் உரு என்பது என்னை

                  பயந்திடும் சத்தி ஆதி பதிதலால் படைப்புமூலம்

                  முயன்றனர் இவரே ஆயின் முன்னவன் தன்னை முற்றும்

                  நயந்திடும்; அவன் இவர்க்கு நண்ணுவது ஓரொவொன்று

                                                                                                 ஆமே

-         சிவஞானசித்தியார் - 80

ஆதாரம் 2. முந்திய முதல்நடு இறுதியு மானாய்
                  மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்

-         திருவாசகம்

ஆதாரம் 3. மூவிலை ஒருதாள் சூலம் ஏந்துதல்
                 மூவரும் யானென மொழிந்த வாறே

-         திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது, 11ம் திருமுறை

ஆதாரம் 4. திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராது அன்றங்கு   

                 அருமால் உற அழலாய் நின்ற – பெருமான்...

-         திருக்கைலாய ஞான உலா, 11ம் திருமுறை

ஆதாரம் 5. அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்

                  அரனாய் அழிப்பவனுந் தானே – பரனாய

                  தேவர் அறியாத தோற்றத்தான் தேவரைத்தான்

                  மேவிய வாறே விதித்தமைத்தான்....

-         திருக்கைலாய ஞான உலா, 11ம் திருமுறை

ஆதாரம் 4. மாலறியா நான்முகனும் காணாமலையினை

-         திருவாசகம்

ஆதாரம் 5. நூறுகோடி பிரம்மர்கள் நொந்தினார்

                ஆறுகோடி நாரணர் அங்ஙனே

                ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர்

                ஈறுஇலாதவன் ஈசன் ஒருவனே

-         திருநாவுக்கரசர் தேவாரம் - 5:100:3

ஆதாரம் 6. உரைத்தஇத் தொழில்கள் மூன்றும் மூவருக்கு உலகம் ஓத

                  வரைத்துஒரு வனுக்கே ஆக்கி வைத்தது இங்கு என்னை?

                  என்னின் விரைக்கம லத்தோன் மாலும் ஏவாலான்

                  மேவினோர்கள்    புரைத்த அதிகார சத்தி புண்ணியம்

                                                                               நண்ண லாலே.

-         சிவஞானசித்தியார் – 54

விரைக்கமலத்தோன் – தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மன்

ஆதாரம் 7. எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
                  கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
                  எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
                  மண்மிசை மால்பலர் மாண்டனர்காண் தோணோக்கம்.

                                          - திருவாசகம்

Last Updated on Thursday, 19 March 2015 22:37
 

EXPOSITION OF TRUTH

LALITHA SAHASRA NAMAM

DEVAA OOCHUHU

KANDHAR SASHTI KAVASAM

SAKALA KALA VALLI MALAI

VINAYAGAR AGAVAL

UPANISHATS

AGAMAS

CHRISTIANS ARE NOT UNDER ATTACK IN INDIA

BY 2050, INDIA TO SURPASS INDONESIA, WILL HAVE LARGEST MUSLIM POPULATION: STUDY

THE FUTURE OF WORLD RELIGIONS TO 2050

SOUL IN DIFFERENT STATES

SHIVA-PURAANAM

THIRU PALLI EZHUCHCHI

KALABHAIRAVA ASHTAKAM

THE LORD'S NAME

THE HOLY ASH

18 MAHA PURANAS IN ENGLISH

VEDANTHAM Vs SAIVA BY R.NAMASIVAYAM

63 SAINTS

VALENTINE DAY - A SAIVA PERSPECTIVE

ABHIRAMI ANDHATHI

 108 NAMES OF DEVI DURGAA

 PORTRAIT OF A HELPER

WHY I AM NOT A CHRISTIAN

SIVA RATRI

WHAT ARE THOSE EIGHTEEN LANGUAGES?

SIVA JNANA BODHAM

SIVA JNANA SIDDHIYAAR

BRAHMANDA PURANAM

THAYUMANAVAR

YOGAR SWAMI

A CURIOUS COURT CASE

THE MAHA RISHI

RITUALS

BHIKSHA

BAGAVAT GITA

BHAJA GOVINDAM

BRAHMINS

THE CRY BABY

ARUKU

TEN STEPS

ANSWERS

SIVA LINGA

HINDU TIMELINE

Category
Home | About Us | Contact Us