தசவாயுக்களும் அவற்றின் தொழிற்பாடுகளும்
Dasa vAyu -The Ten Vitals and theirFunctions
இ. லம்போதரன்
சைவசித்தாந்தபீடம், கனடா
www.knowingourroots.com
“பிலத்து நிற்கும் பிராணனோடு அபானன்எனும்
பிரியாவியானன் சமானனொடு கூர்மன்
நலத்து நின்ற நாகன்எழிற் கிருகரன் தானாகும்
நற்தேவதத்தன் ஒடுதனஞ்செயன் பத்தாகும்
இலக்கமுடன் பிரண நிலைமூலமதிற் தோன்றிஎழுந்து
சிரசளவு முட்டி இரு விழியின் கீழாய்
கலக்கமற நாசிவழி ஓடும் நிராறில் கடுகியெட்டு
உட்புகுந்து கழியும் ஓர்நான்கே
உந்தியெனுந் தலத்தின்கீழ் அபானன்நின்று
உறுமி மலங்களையும் கழலச்செய்யும்;
விந்தையெழில் வியானன் தோள்தனில் நின்று
மிகக் களையுந் தவனமும் உண்டாகச் செய்யும்;
பிந்த உதானன் செயல் உண்டசனந் தன்னைப்
பொருநாடி நரம்புவருவூட்டல் செய்யும்;
இந்த உடலதனை வளர்க்குஞ் சமானன்தானும்
யாவையு மேமிஞ்ச வொட்டாது இருக்கு மன்றே;
கூர்மன் இருவிழியில் நிமைத்திடுமே; நாகன்
கொட்டாவி விக்கலெனுங் கொடுமை செய்யும்;
தீர்மை கிருகரன் நீட்டி முடக்கி வைக்கும்;
தேவதத் தன்விழித்துமே வசனஞ் செய்யும்;
பேர்மன்னுந் தனஞ்சயன்மேற் சிரசிரண்டாய்ப்
பிளந்திடும் போது அது ஓடிப் போவதாகும்;
நேர்மை அறிந்திடுவை இனிநாடி பத்தின்
நிலை தெரிந்திடவிபரம் உரை செய்வோமே”
The ten vitals in action in their respective places are
prANa, apAna, udhAna,vyAna, samAna, koorma, nAga,
kiruhara, dEvadaththa and dananjaya. Among these ten,
prANa originates from moolAdAra in the perineum
and hits the vertex before it comes down
through the nostrils below the eyes.
Proportionate timing of inhalation is eight
and the exhalation is four.
apAna is stationed below the naval
and expels excreta.
vyAna is stationed at the shoulders and
exhibits personality and appearance.
udAna circulates the nutrition
from the digested food
to the different parts of the body.
samAna, which permeates the body,
assimilates and nourishes.
koorma stationed at the eyes does blinking.
nAga gives rise to yawns and hiccups.
kiruhara activates the locomotive system
and stretch and constrain them accordingly.
Devadatta addresses talk.
Dananjaya holds the internal spaces in place
(stays in the body even after death)
will escape when the skull (or the chest)
splits during cremation.
If not cremated it is the putrefaction force
for the body to decay.
We said these to you to
learn these without errors.
- அகத்தியர்இரத்தினகிரிகடம்- பாடல்19-21
- Ratnagiri Gadam by the Sage Agastya, song 19 - 21
|