Kantha purANam
by Kachciyappa SivAchchAriyAr
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்.
vAn mukil vazhAthu peyka;
mali vaLam churakka; mannan
kOn muRai arasu seyka;
kuRaivu ilAthu uyirkaL vAzhka;
nAn maRai aRangkaL Ongka;
nattavam vEzhvi malka;
mEnmai koL Saiva neethi
viLangkuka ulakam ellAm.
Meaning:
May the rain fall in seasons without fail;
May the resources prosper;
May the King rule the country justly;
May all the living beings live without any hindrance; For this
May the dharma of four vEdas prosper;
May the spiritual austerities and fire rituals prosper well;
May the Supreme Saiva dharma reign all over the world.
மூவிரு முகங்கள் போற்றி; முகம்பொழி கருணை போற்றி;
ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி; காஞ்சி
மாவடி வைகுஞ் செவ்வேள் மலரடி போற்றி; அன்னான்
சேவலு மயிலும் போற்றி; திருக்கைவேல் போற்றி போற்றி.
Mooviru muhangkaL Potti; muham pozhi kariNai pOtti;
Evarum thuthikka ninRa eerARu thOL pOtti; KAnchi
mAvadi vaikum chevvEL malar adi pOtti; annAn
chEvalum mayilum pOtti; thiruk kai vEl pOtti; pOtti.
Meaning:
Glory to the twelve faces; Glory to the Grace coming from them;
Glory to the twelve arms glorified by celestials;
Glory to flowery red feet of Him resides at KAnchi under mango tree;
Glory to His rooster and peacock; Further glory to the spear in His hand.
கோலமா மஞ்ஞை தன்னில், குலவிய குமரன் தன்னைப்
பாலன் என்று இருந்தேன்; அந்நாள் பரிசிவை உணர்ந்திலேன் யான்;
மாலயன் தனக்கும், ஏனை வானவர் தமக்கும், யார்க்கும்
மூல காரணமாய் நின்ற மூர்த்தி, இம் மூர்த்தி அன்றோ!
kOlamA manjnjai thannil kulaviya kumaran thannai
pAlan enRiru irunthEn; annAL parisu ivai uNarnthilEn yAn;
mAlayan thanakkum, Enai vAnavar thamakkum yArkkum
moola kAraNamAy ninRa moorthi, im moorthi anRO!
Meaning:
The Lad who playfully mounting on the beautiful peacock
I didn’t realize His true nature and ignored Him merely a child;
I didn’t even realize that it was Him
Who granted me all these boons before ( as Lord Shiva)
He stands alone as the cause of the all causes;
Including Brahma, VishNu, celestials and all others
As the Lord of the lords!
ஆறிரு தடந்தோள் வாழ்க; அறுமுகம் வாழ்க; வெற்பைக்
கூறுசெய் தனிவேல் வாழ்க; குக்குடம் வாழ்க; செவ்வேள்
ஏறிய மஞ்சை வாழ்க; யானை தன் அணங்கு வாழ்க
மாறிலா வள்ளி வாழ்க; வாழ்க சீர் அடியார் எல்லாம்.
AaRiru thadam thOL vAzhka; aRumugam vAzhka; vetpaik
kooRu sey thani vEl vAzhka; kukkudam vAzhka; chevEL
ERiya manjnjai vAzhka; yAnai than aNangu vAzhka;
mARilA vaLLi vAzhka; vAzhka seer adiyAr ellAm.
Meaning:
Glory to the great twelve arms; Glory to the six faces;
Glory to the spear that pierced the krouncha mountain;
Glory to the rooster in the flag; Glory to the peacock He mounts on;
Glory to His consort vaLLi; Glory to all of His Great devotees!