உ
பிள்ளையார் தியானம்
- எங்களுடைய மனப்பாங்கும் (ATTITUDE) அணுகுமுறையும் (APPROACH) பரந்தும் விரிந்தும் இருக்க வேண்டும்; பிள்ளையாரின் சரீரம் போல.
- எங்களுடைய வாழ்க்கைப் பயணத்தில் அனைத்தையும் அனைவரையும் உள்வாங்கிப் (INCLUSIVE) பயணிக்க வேண்டும்; பிள்ளையாரின் பேளை வயிறு போல.
- சாகாவரம் பெற்ற அசுரத்தனங்களாகிய கஜமுகாசுரனாகிய எங்களுடைய காமம், கோபம், குரோதம், மோகம், மதம், மாச்சரியம், அவசரம், ஆற்றாமை போன்ற இடையூறுகள் மலை போல் இருந்தாலும் அவற்றை அடக்கி எலி போலச் சிறிதாக்கி (REDUCE THEM) நாம் அவற்றை நமக்கு ஏற்றபடிக்கு நாம் போகும் வழிக்கு ஏவல் செய்ய வேண்டும் (CONTROL TEHM FOR YOUR USE) ; மாறாக நாம் அதன் ஏவல்களுக்கு அடங்கி அது போன போக்கில் போகக் கூடாது (INSTEAD OF CONTROLLED BY THEM) . பிள்ளையார் கஜமுகாசுரனை அடக்கி எலியாக்கி அதை தமது வாகனமாக வைத்திருப்பது போல.
- எங்களுடைய வாழ்க்கையின் செயற்பாடுகள் பலதரப்பட்டதாக இருந்தாலும் (MULTITUDE ACTIONS); பிள்ளையாரின் நான்கு கரங்கள் போல்.
- மலை போன்ற பெரிய விடயங்களையும் சிக்கலின்றி எளிமையாகக் கையாள வேண்டி (SIMPLICITY) அங்குசம்;
- எத்தனை வளங்கள் ஆயுதங்களாக இருந்தாலும் உண்மையில் தனக்குத் தானே பாதுகாப்பு (NO ONE CAN SAVE YOU EXCEPT YOURSELF) என்பதற்கான தற்பாதுகாப்பைக் குறிக்கும் முறித்த ஒற்றைத் தந்தம்;
- வாழ்க்கையில் மற்றவர்களுக்கும் உதவ வேண்டும் (HELP OTHERS) என்பதற்கான அபய கரம்;
- தானும் வாழ்க்கை இன்பங்களை அனுபவிக்க வேண்டும் (ENJOY YOUR LIFE) என்பதற்கான தனக்குப் பிடித்த இனிய மோதகம்;
- இவை எல்லாவற்றையும் செய்தாலும் எமது வாழ்க்கையின் நோக்கம் இவற்றுக்கு வேறாக தனிப்பட்டு பிள்ளையாரது தும்பிக்கை போல ஒன்றாக இருக்க வேண்டும், ஒரு முகப்பட்டதாக இருக்க வேண்டும் (FOCUSED ON YOUR JOURNEY); அதே சமயம் வளைந்து கொடுக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும் ( BE FLEXIBLE AT THE SAME TIME).
- பரந்துபட்ட செயற்பாடுகள் – ACTION இருந்தாலும் எமது பார்வை – VISION, நோக்கம் கூர்மையானதாகவும் (SHARP) தூர நோக்குடையதாகவும் (LONG-TERM), அவதானமாகவும் (CAUTION) இருக்க வேண்டும்; பிள்ளையாரின் யானைக் கண்கள் போல.
- எதையும் மனம் வைத்துக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் (LISTEN MORE/ ATTENTIVE LISTENING); பிள்ளையாரின் பரந்த காதுகள் போல.
- வாய் காட்டாதீர்கள் (DON’T ARGUE), கனக்கக் கதைக்காதீர்கள் (TALK LESS); பிள்ளையாரின் வெளித்தெரியாத வாய் போல.
- இந்தப் பிள்ளையார் தியானத்தை நாம் உள்வாங்கினால் அவர் எம்மில் கரைந்து பரந்து மறைந்து நிறைந்து விடுவார். அதன்பின் நாம் அவரைக் காவத் தேவையில்லை; நாம் அவராகவே ஆகிவிடுவோம்.
ஓம் தத்துவமஸி