ஆகம_அடிப்படையில் அமைந்த சைவ முறையிலான செப மாலைப் பிரதிட்டை – மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 03

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 03

#ஆகம_அடிப்படையில்_அமைந்த_சைவ_முறையிலான #செப_மாலைப்_பிரதிட்டை.
“சத்தியோ சாதத்து அபிடேகம் சாதிக்க
உத்தரத்தால் மத்திக்க ஓர்ந்து.”

விதிமுறைகளை ஆராய்ந்து சதாசிவனின் மேற்கு நோகிய முகத்துக்குரிய ஓம் சத்தியோஜாதாய நம: என்னும் சத்தியோஜாத மந்திரத்தினால் எண்ணெய்க் காப்பு சாத்தி அபிடேகம் பண்ணி ஐம்முக சதாசிவனுடைய உத்தர திசையெனும் வடதிசை நோக்கிய முகத்துக்குரிய ஓம் வாமதேவாய நம: என்னும் வாமதேவ மந்திரத்தினாலே தர்ப்பை சாத்தி ஓம் ஹிருதயாஜ நம: என்னும் இருதய மந்திரத்தினாலே கந்த புஷ்பம் சாத்துக.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 136.

“கொடுத்திடுக தூபம் அகோரமனுக் கூறித்
துடைத்திடுக தற்புருடஞ் சூழ்ந்து.”

சதாசிவனுடைய தட்சண திசை என்னும் தென் திசை நோக்கிய முகத்துக்குரிய ஓம் அகோராய நம: என்னும் அகோர மந்திரம் உச்சரித்து தூப தீபம் காட்டி ஓம் தற்புருஷாய நம: என்னும் கிழக்குத்திசை முகத்துக்குரிய தற்புருட மந்திரம் உச்சரித்து திருவொற்றாடையால் துடைக்க.
-சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 136.

“தனித்தனியே ஈசானத் தாலே சதகம்
எணிக்குறையா மேசெபிக்க வேய்ந்து.”
ஒவ்வொரு மணியையும் தனித்தனியாகத் தொட்டு சதாசிவனின் உச்சி முகத்துக்குரிய ஓம் ஈசானாய நம: என்னும் ஈசான மந்திரத்தினால் ஒவ்வொன்றுக்கும் நூறு உருவிற்குக் குறையாமல் செபிக்க.
-சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 137

நாயகத்தைத் தொட்டு நவில்க பிரமெலாம்
ஏய சதங்குறையா தே.”
நாயக மணியைத் தொட்டு ஈசான, தற்புருஷ, அகோர, வாமதேவ, சத்தியோஜாதம் என்னும் ஐந்து பஞ்சப்பிரம்ம மந்திரங்களினாலும் நூறு தடவைக்குக் குறையாமல் செபிக்க.
– சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 138

“பரமசிவ னைப்பூசை பண்ணுமுறை போலப்
பரமமா நாயகத்தில் பண்.”
நித்திய ஆன்மார்த்த பூசையிலே பரமசிவனைப் பூசிப்பது போல நாயக மணியிலே பூசை செய்க.
-சிதம்பரம், கண்கட்டி மடம் மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய சைவசமயநெறி, குறள் 139

இவ்வாறு வைதீக முறையிலோ அல்லது சைவ முறையிலோ பிரதிட்டை பண்ணிப் பூசித்த செபமாலையே செபம் செய்வதற்கும், மற்றவர்களுக்கு செபம் செய்வதற்கு வழங்குவதற்கும் ஏற்றதாகும்.

வைதீக முறை பிரதிட்டை…….link
https://m.facebook.com/story.php?story_fbid=198372789972303&id=100093987489378&mibextid=Nif5oz

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).