பஞ்சாக்ஷர ஜெபத்திற்குரிய விஷேச காலங்களும் இயம நியமங்களும். மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 9

மந்திர செபம் – பஞ்சாக்ஷர செபம் – 09

ஸ்ரீபஞ்சாட்சரத்தை எப்படிப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்?
தத்தம் வருணத்துக்கும் ஆச்சிரமத்துக்கும் தீட்சைக்கும் ஏற்பக் குருமுகமாகவே பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

விளக்கக் குறிப்பு:1.
குரு இல்லா வித்தை பாழ்

விளக்கக் குறிப்பு:2.
வர்ணாசிரம தர்மம்…link 1
https://m.facebook.com/story.php?story_fbid=215700304906218&id=100093987489378&mibextid=Nif5oz
வர்ணாசிரம தர்மம்…link 2
https://m.facebook.com/story.php?story_fbid=216281618181420&id=100093987489378&mibextid=Nif5oz

விளக்கக் குறிப்பு: 3.
“ஜன்மனே ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”
பிறப்பில் அனைவரும் சூத்திரர்களே; செய்யும் தொழிலினால்தான் இருபிறப்பாளர் ஆகின்றனர்.
(உபநயனம் என்னும் பூணூல் அணியும் சடங்கு ஒரு மறு பிறப்பாகும். இரு பிறப்பாளர் என்பது பூணூல் அணியும் பிராம்மண, ஷத்திரிய, வைசிய, சூத்திரர்களைக் குறிக்கின்றது.)
– மநு ஸ்மிருதி என்னும் kமனுதர்ம சாத்திரம்

“தர்ப்பணத்தில் அர்ச்சனையில் ஆகுதியிலும் தரிக்க
இல்பயிலும் சூத்திரர் இந்நூல்”
இல்வாழ்வில் உள்ள சூத்திரர்கள் தர்ப்பணம், அர்ச்சனை, ஆகுதி முதலிய கருமங்கள் செய்யும்போது பூணூல் தரிக்க வேண்டும்.
“இவருள் நயிட்டிகன் எப்ப்போதுந் தரிக்க
அவனியிலும் ஆசை அறுத்தால்”
சூத்திரரில் உலகவாழ்வில் பற்றுத்த நைட்டிகப் பிரமச்சாரி எப்போதும் பூணூல் தரிக்கலாம்.
– காழி மறைஞானசம்பந்த தேசிகர் அருளிய
சைவசமய நெறி, பொது அதிகாரம், குறள் 52, 53
..இரு பிறப்பளர் பொழுதறிந்து நுவல…..
– 11ம் திருமுறை – திருமுருகாற்றுப்படை

இரு பிறப்பாளர் என்பது உபநயனம் பெற்ற பிராமணர்களை. காயத்திரி மந்திர உபதேசம் பெறும் உபநயனம் என்பது மீண்டும் புதிய பிறவி எடுப்பதற்கு ஒப்பானது. இவர்களைத் துவிஜர்கள் என்றும் கூறுவர்.

விளக்கக் குறிப்பு: 4.
நாவலர் கண்ட வர்ணாசிரம தர்மம் link
https://m.facebook.com/story.php?story_fbid=161697820306467&id=100093987489378&mibextid=Nif5oz

விளக்கக் குறிப்பு : 5
சாதி உயிர்க்கில்லை, தரும் கரும பேதத்தால்
நீதி குல நான்காக நின்றுளதால்.
உயிர்களுக்கு சாதி கிடையாது; தாம் செய்யும் தொழில் பேதத்தால் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு குலங்களாக வகுக்கப்பட்டுள்ளன.
– பண்டார சாத்திரம், சிந்தாந்தப்பஃறொடை 137- 140
வர்ணம் – link
https://m.facebook.com/story.php?story_fbid=155367697606146&id=100093987489378&mibextid=Nif5oz
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).