மனித உடலிலே கடவுள் எங்கே இருகின்றார்? – Part 03
மூவகை ஆகாசங்கள்:
01. சட ஆகாசம் Part – 01
https://m.facebook.com/story.php?story_fbid=112512271891689&id=100093987489378&sfnsn=mo&mibextid=RUbZ1f
02. சிதாகாசம்: Part – 02
https://www.facebook.com/Hindu.Saiva/posts/113030491839867
03. பராகாசம்: Part – 03
வெளிப்பட்டு நிற்கும் இந்த பிரபஞ்சம் பிரகிருதி மாயையில் இருந்து தோன்றி அதன் பகுதியாக நிற்பது. இதற்குள்ளும், இதை வியாபித்தும், இதற்கு அப்பாலும் அசுத்த மாயா உலகங்களும், சுத்த மாய உலகங்களும் உள்ளன. இவை யாவும் மாயையை மூலப்பொருளாகக் கொண்ட உலகங்களே.
பிரகிருதி மாயை இருப்பில் நமது அண்டத்தொகுதி உலகங்களும், தேவலோகங்களும்,இன்னும் பல அண்டங்களும் உள்ளன.
இந்த பிரகிருதிமாயையை ஊடுருவியும், வியாபித்தும், இதற்கு அப்பாலாயும் அசுத்த மாயா உலகங்கள் உள்ளன. இவற்றின் இருப்பும், இயக்கமும் பிரகிருதி மாயா உலகங்களுக்குப் புலனாகா.
இந்த பிரகிருதி உலகங்கள், அசுத்த மாயா உலகங்கள் இரண்டையும் வியாபித்தும், ஊடுருவியும், அப்பாலாயும் சுத்த மாயா உலகங்கள் உள்ளன. இவற்றின் இருப்பும் இயக்கமும்கூட பிரகிருதி மற்றும் அசுத்த மாயா உலகங்களுக்குப் புலனாவதில்லை.
இந்த மூவுலகங்களும் மாயையிலிருந்து தோன்றி மாயையால் ஆனதாகவும், ஈற்றில் மாயையில் ஒடுங்குவதாகவுமே இருக்கின்றன.
ஆனால் இந்த மூவுலகங்களையும் வியாபித்தும், ஊடுருவியும், இவற்றுக்கு அப்பாலாயும் உள்ளது பரலோகம்.
இது இறையின் சித்சக்தியால் ஆனது. சித் சக்தி பரை எனப்படும். ஆதலால் இந்த உலகம் பரலோகம் என அழைக்கப்படுகின்றது. இங்குள்ள ஆகாசம் சித்சக்தியாகிய பரையின் வடிவாக உள்ள பராகாசம் ஆகும். இங்கு நடைபெறும் இறைவனின் நடனம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. இதை அதி சூக்கும நடனம் என்பர்.
• கற்பனை கடந்த சோதி, கருணையே உருவ மாகி
அற்புதக் கோல நீடி, அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகுந் திருச்சிற்றம் பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
– 12ம் திருமுறை – பெரியபுராணம் 351
• யஸயஸா பரமாதேவீ சக்திராகாச ஸம்ஞிதா
எவருடைய பரமசத்தி உண்டோ. அந்தச் சத்தியே ஆகாசம் எனப்படுவது.
– கூர்ம புராணம், உத்தர பாகம்- 36ம் அத்தியாயம்
• ஆகாசஸ் தல்லிங்காத்
ஆகாசம் பிரம்மம்; அதன் அடையாளங்களால்
– பிரம்ம சூத்திரம் 1.1.23
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD)
அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).