கடவுளின் படைப்பின் நோக்கம் என்ன?

கடவுளின் படைப்பின் நோக்கம் என்ன?

உயிர்களுக்கு இயல்பாகவே உணரும் ஆற்றலும், அறியும் ஆற்றலும், அநுபவிக்கும் ஆற்றலும் இருக்கின்றன. ஆனால் பிறப்புக்கு முந்திய நிலையில் அவற்றுக்கு இதற்கான புலன்களோ, அவயவங்களோ, கருவிகளோ இல்லை. இந்நிலையில் ஆற்றல் இருந்தும், உணர்வு இல்லாமல், அறிவு இல்லாமல், அநுபவிப்பும் இல்லாமல் உயிர்கள் இருக்கின்றன. பிறவிக்கு முந்திய இந்நிலையை அநாதி கேவல நிலை என்று சைவம் கூறுகின்றது. கேவலம் – தனிமை.

இந்த அநாதி கேவல நிலையில் உள்ள உயிர்களின் ஆற்றலை ஆணவம் என்னும் அறியாமை இருள் முற்றாக மூடி மறைத்திருக்கின்றது. அணுத்தன்மையதாக ஆக்கி உயிர்களைச் சிறுமைப்படுத்தி வைத்திருப்பதால்தான் இதற்கு ஆணவம் என்று பெயர்; இது அகந்தை அல்லது தற்பெருமையைக் குறிப்பது அல்ல.That which atomizes the soul is called ANava. இந்த ஆணவ அழுக்கை மூல மலம் (The Root Fetter) என்று சைவம் கூறுகின்றது.

இறைவன் உயிர்கள் மீது கொண்ட அருளினால், இவ்வாறு இருக்கும் உயிர்களுக்கு உடலைக் கொடுத்து, உலக போகங்களையும், அதன் அநுபவங்களையும் கொடுகின்றான். இவ்வாறு பிறவி தோறும் வருகின்ற அநுபவங்களின் முதிர்ச்சியினால் ஈற்றில் தன்னையறிந்து அநுபவிக்கவும் வைக்கின்றான். இதுவே படைப்பின் நோக்கம் என்று சைவம் கூறுகின்றது.

• காரிட்ட ஆணவக் கருவறையில் கண்ணிலாக் குழவியைப் போல்
கட்டுண்டிருந்த எமை வெளியில் விட்டு
சொற்பொருள்:
கார் – கரிய இருள்; குழவி – குழந்தை
– தாயுமானார் பாடல்

Book Reference –
பசுவியல் – விளக்க முற் குறிப்பு – 7
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *