சைவத்தின் அண்டவியல் விஞ்ஞானம் – 01
Hindu Cosmology and Science – 01
மேற்குலகம் எமது பூமி மட்டும் தான் உலகம் என்றும், அது தட்டையானது என்றும், அதைச் சுற்றியே சூரியன் சுற்றி வருகின்றது என்றும், இந்த சந்திரன் மற்றும் நடசத்திரங்கள் யாவும் பூமியின் அலங்கார விளக்குகள் என்றும் கூறும் புவிமையக் கொள்கையைக் கொண்டிருந்தார்கள்; அவர்களின் சமயக் கோட்பாடுகளும் அதையே சொல்லிவந்தன.
இத்தாலியாவைச் சேர்ந்த கலிலியோ கலிலி ( 1564 – 1642) 1610ம் ஆண்டில் தனது தொலைநோக்கியால பால்வீதி அண்டத்தொகுதி என்பது சூரியனைப்போன்ற பல நட்சத்திரங்களைகொண்ட ஓர் உடுத்திரள் என்று ஆவனப்படுத்தினார். பூமி கோள வடிவானது என்றும், அது சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கின்றது என்றும் முதன்முதலில் கூறியது அவரே.
அவரது இந்த வெளிப்பாட்டுக்காக அவர் திருச்சபையால் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இந்தக் கண்டுபிடிப்பை உறுதிப்படுத்தியதற்காகவும், ஆதரித்ததற்காகவும் மேலும் பல விஞ்ஞானிகள் தீயிலிட்டுக் கொல்லப்பட்டனர்.
1610 இல் இருந்து 1920 வரை பிரபஞ்சம் என்பது எமது பால்வீதி அண்டத்தொகுதியே என்றும் நாம் காணும் அனைத்து நட்சத்திரங்களும் எமது பால்வீதி அண்டத்தொகுதியில்தான் உள்ளன என்றும் வானியல் விஞ்ஞானம் கருதி வந்தது.
1920 இல் எட்வின் ஹபிள் Edwin Hubble (1899 – 1953) எனும் விஞ்ஞானியே முதன்முதலில் எமது பால்வீதி உடுத்திரளுக்கு அப்பாலும் வேறு அண்டத்தொகுதிகள் உள்ளன என்பதைத் தெரிவித்தார். ஆரம்பத்தில் இதற்குப் பல எதிர்ப்புகள் இருந்தது. ஆனாலும் இது உண்மையே என்பது 1970 களிலேயே ஆய்வுகளினால் உறுதிப்படுத்தப்பட்டது.

இவரைக் கௌரவிக்கும் முகமாக 1990 இல் விண்வெளியில் ஏவப்பட்டு அண்டத்தொகுதிகளை நமது ஆய்வுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் சக்தி வாய்ந்த தொலைநோக்கிக்கு ஹபிள் தொலைநோக்கி என்று பெயரிடப்பட்டது. இப்போது ஜூலை 2022 இல் இதனிலும் பன்மடங்கு வினைத்திறன் கொண்ட ஜேம்ஸ் வெப் James Webb தொலைநோக்கி பயன்பாட்டுக்கு வரும்வரை இதுவே சக்தி மிகுந்த தொலைநோக்கியாக விளங்கியது.
ஜேம்ஸ் வெப் James Webb 1961 இல் இருந்து 1966 வரை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குனராக இருந்தவர். அதற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதியின் நிர்வாக அதிகரியாக இருந்தவர். இவர் காலத்தில் நாசா அரச நிதிப் பங்களிப்புடன் பெரு நிறுவனமாக வளர்ச்சி பெற்றது. இவர் காலத்திலேயே சந்திர மண்டலத்தில் மனிதன் காலடி எடுத்து வைத்தான். இவரைக் கௌரவிக்கு முகமாகவே 2021 டிசம்பர் 25 இல் விண்வெளிக்கு ஏவப்பட்ட சக்தி வாய்ந்த அகச்சிவப்புக் கதிர் (Infra red) தொலைக்காட்சிக்கு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி என்று பெயரிடப்பட்டது.
இதன் அண்டவெளிப் படப்பிடிப்புகள் ஜீலை 12 இல் இருந்து உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றன. இந்தப் படங்கள் முன்னர் பார்த்திராத பல அண்டங்களையும் அவற்றின் தோற்றத்தையும் வனப்பையும் மட்டுமல்லாது பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றின் உருவாக்கத்தையும் கூடப் பிட்டுப் பிட்டு வைக்கின்றது. இவற்றைப் பார்க்கும்போது மாணிக்க வாசகரின் பின்வரும் திருவாசக வரிகள் நினைவு கூரத்தக்கன.
“அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பரும் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன.”
– திருவாசகம், திருவண்டப்பகுதி
இவ்வாறு எமது புவி சார்ந்த பால்வீதி அண்டத்தொகுதி போல் ஒன்றுக்கு மேற்பட்ட பல அண்டத்தொகுதிகள் உள்ளன என்று இன்று விஞ்ஞானிகள் சொல்வதை அன்றே ஆகமங்களிலும் புராணங்களிலும் மீண்டும் மீண்டும் ஒன்றுக்கொன்று முரணில்லாமல் கூறியது எமது சைவ சமயம்.
“அப்பெரும் புவிக்குத் தான்ஓர் ஆயிர கோடி அண்டம்”
– கந்த புராணம் – 725
இன்று 2023 ஜூலையில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினூடாக படம் பிடித்த, முன்னம் யாருமே கண்டிராத அண்டத்தொகுதிகளின் காட்சியானது அளவிறந்து பரந்த அண்டத்தொகுதிகளில் ஒரு துகளே என அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை போல் அன்றே கந்தபுராணமும் அறிக்கையிடுகின்றது.
“…..அங்கண்மா ஞாலத் தண்டம் ஆயிர கோடி தன்னில்
இங்குநீ பெற்ற அண்டம் ஆயிரத் தெட்டி னுள்ளுந்
துங்கமாம் அண்டமொன்றின் இயற்கையைச் சொல்லுகின்றேன்………”
– கந்த புராணம் – 726
“For a person standing on earth looking up, the field of view of this new image, ….. is approximately the size of grain of sand held at arm’s length.
– NASA announcement on the July 12, 2022
“பரந்து விரிந்த உடுத்திரள்களில் (அண்டத்தொகுதிகளில்) இன்று நாம் ஜேமஸ் வெப் தொலைநோக்கி கமராவில் காணும் அண்டத்தொகுதிகளின் காட்சியானது, நிலத்தில் நிற்கும் ஒருவர் மண்ணின் ஒரு மணல் துகளைக் கையளவு தூரத்தில் வைத்துப் பார்ப்பதற்கு ஒப்பானது.
– நாசா அறிக்கை, ஜூலை 12, 2022”
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).