மனித உடலில் உயிர் அனுபவிக்கும் ஐந்து அவத்தைகள் யாவை?

மனித உடலில் உயிர் அனுபவிக்கும் ஐந்து அவத்தைகள் யாவை?
1. விழிப்பு நிலை :- புருவ மத்தியில் – முப்பத்தைந்து கருவிகளுடன் உயிர் தொழிற்படுகின்றது.
2. கனவு நிலை :- கண்டத்தில் – இருபத்தைந்து கருவிகளுடன் உயிர் தொழிற்படுகின்றது.
3. ஆழ்ந்த உறக்க நிலை :- இருதயத்தானத்தில் – மூன்று கருவிகளுடன் தொழிற்படுகின்றது.
4. துரிய நிலை :- உந்தித் தானத்தில் – இரண்டு கருவிகளுடன் தொழிற்படுகின்றது.
5. துரியாதீத நிலை :- மூலாதாரத்தில் – உயிர் புருடனாகத் தனித்து நிற்கும் நிலை
• பஞ்சவஸ்தா: ஜாக்ரத் ஸ்வப்ந ஸுசுப்தி துரியதுரியாதீதா
– சுக்ல யசுர்வேதம், மண்டல ப்ராஹ்மண உபநிடதம்
• சாக்கிரம் முப்பத்தைந்து……………………..
………………………………………………… மூலத்தின் ஒன்றே
-மெய்கண்ட சாத்திரம் – சிவஞானசித்தியார் 223
•படைகொடு பவனி போதும்…………………….
………………………………அஞ்ச வத்தை உறுமுயிர் காவ லாக.
-மெய்கண்ட சாத்திரம் – சிவஞானசித்தியார் 222
*****எமது சைவ சமயிகள் நெற்றியில் விபூதி பூசுவதும், பொட்டு வைப்பதும் எதற்காக?****
நாம் விழித்திருக்கும்போது எமது உயிர் புருவ மத்தியில் நின்று தொழிற்படுகின்றது. நாம் நெற்றியில் விபூதி பூசுவதும், சந்தனம், குங்குமம் வைப்பதும் உயிரினுள் அதனுடன் என்றும் பிரியாது நின்று உறையும் இறைவனுக்கே.
• ஆமப்பா இரு விழியின் மத்தியில்தான்
அப்பனே மூக்கு நுனி அடிவாரத்தில்
நேமப்பா ஈசன் வீற்றிருக்கும் பீடம்
நிலையறிந்து கொண்டவர்க்கு நன்றாய்த் தோன்றும்
நாமப்பா கண்டல்லோ விபூதியோடு
நலமான சந்தனமும் பொட்டதாகத்
தாமப்பா குங்குமம் கஸ்தூரி இட்டு
தயவுபெறப் பூசிப்பது அறிந்து பாரே
– தன்வந்திரி ஞானசைதன்யம் 3/21
Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD)
அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *