வர்ணாசிரமதர்மம்

#வர்ணாசிரமதர்மம்

வர்ணாசிரம தர்மம் என்பது பலர் கூறுவது போல மனிதரை மனிதர் இழிவு படுத்தும் சாதி ஒடுக்குமுறை அல்ல.

எமது சமயம் பொதுமக்களுக்கான பொது வாழ்க்கை நெறியான வர்ணாசிரம தர்மத்தையும், தீவிர ஆன்மீக நாட்டம் உள்ளவர்களுக்கான சிவாச்சிரம தர்மத்தையும் கூறுகின்றது.

பொது வாழ்க்கை நெறியான வர்ணாசிரம தர்மத்தில் வர்ணம் என்பது அவரவர் சமூக நிலையையும், ஆசிரமம் என்பது அவரவர் தனிமனித நிலையயும் குறிக்கின்றது.

#வர்ணம்:
அக்காலத்திலும், இக்காலத்திலும், எக்காலத்திலும், உலகின் எந்த ஒரு சமுதாயத்திலும் புத்திஜீவிகள், அரசாற்றுவோர், உற்பத்தித் துறையினர், தொழிலாளர் என நான்கு பிரிவுகள் அல்லது வர்ணங்கள் என்றுமே உள்ளன. இந்த நான்கும் ஒரு வண்டி இயங்குவதற்கு அவசியமான நான்கு சக்கரங்கள் போல ஒரு சமூகம் இயங்குவதற்கு அவசியமான நான்கு சமூகப் பிரிவுகளாகும். இவற்றில் ஒன்று தளர்ந்தாலும் முழு சமூகமும் தளர்ந்துவிடும். அந்தந்த நேரத்தில் அந்தந்த சமுதாயத்தின் தேவைக்கேற்ப விதிக்கப்படும் மேற்குலக நாடுகளின் குடிவரவு விதிமுறைகள் ஒரு கால கட்டத்தில் தொழிலாளர்களையும், இன்னொரு காலகட்டத்தில் புத்தி ஜீவிகளையும், இன்னொரு கால கட்டத்தில் முதலீட்டாளர்களையும், இன்னொரு கால கட்டத்தில் அரசியல் தஞ்சம் கோருவோரையும் வரவேற்பதைக் கண்கூடாகக் காண்கின்றோம். இந்தப் பிரிவுகளின் கடமை மற்றும் பணிகளில் வேறுபாடுகள் இருந்தாலும் ஏற்றத்தாழ்வுகள் கிடையாது.

ஏற்றத்தாழ்வுகள் சமூகத்தின் சில பிரிவினரால் அந்தந்த கால கட்டத்தில் தம்மிடம் வந்து குவிந்த அதிகார மற்றும் பொருளாதார மையங்களைத் தமக்கும் தமது சந்ததியினருக்கும் தக்க வைத்துக் கொள்வதற்காக புகுத்தப் பட்ட திணிப்புகளே. இதுவே சாதிகளில் ஏற்றத்தாழ்வாக பின்னர் பரிணமித்தது.

#ஆசிரமம்:
ஆசிரமம் என்பது ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையிலும் வருகின்ற அல்லது வரக்கூடிய நான்கு பருவங்கள் அல்லது நிலைகளைக் குறிக்கின்றது. இவை மாணவப் பருவம், இல்லற நிலை, ஓய்வு நிலை, துறவறம் என்னும் நான்காகும்.
இவற்றுள் எந்த முதல் மூன்று நிலைகளில் இருந்தும் துறவற நிலைக்குச் செல்லலாம். மாணவப்பருவமும், துறவறமும் சொந்த தொழில் முயற்சிகளோ, வருமானமோ இல்லாத நிலைகள் ஆதலினால் தமது அடிப்படைத் தேவைகளுக்காக மற்றவர்களிடம் தங்கி நிற்கும் நிலைகளாகும். மாணவப் பருவத்தில் ஒருவர் தனது குடும்பத்தினரிடம் தனதுது தேவைகளுக்காகத் தங்கியுள்ளார். இதேபோல் குடும்ப உறவுகளைத் துறந்த துறவிகள் தமது தேவைகளுக்காகச் சமூகத்திலே தங்கியுள்ளனர். இவர்களை ஆதரிப்பது இல்லறத்தாருக்கு கடமையாக விதிக்கப்படிருக்கின்றது.

“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழவான் என்பான் துணை. ”
– திருக்குறள் 42

Book Reference –
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *