மொத்தமாக எத்தனை உயிர்கள் உள்ளன

மொத்தமாக எத்தனை உயிர்கள் உள்ளன?

எண்ணற்ற உயிர்கள் எமது பூமியில் மட்டுமல்ல; கோடிக்கணக்கான அண்டத்தொகுதிகளில் உள்ள வேறு வேறு உலகங்களிலும் உள்ளன என்று சைவம் கூறுகின்றது. உயிர்களின் எண்ணிக்கை கணித மொழியில் கூறுவதாயின் முடிவிலி ஆகும்.

“எண்ணரிதாய் நித்தமாய் இருள்மலத்தின் அழுந்தி
இருவினையின் தன்மைகளுக் கீடான யாக்கை
அண்ணலரு ளால்நண்ணி அவை அவரா யதனால்
அலகில்நிகழ் போகங்கள் அருந்தும் ஆற்றால்
புண்ணியபா வம்புரிந்து போக்குவர வுடைத்தாய்ப்
புணரும்இருள் மலபாகம் பொருந்தியக்கால் அருளால்
உள்நிலவும் ஒளியதனால் இருளகற்றிப் பாதம்
உற்றிடும்நற் பசுவருக்கம் எனஉரைப்பர் உணர்ந்தோர்”
– மெய்கண்ட சாத்திரம், சிவப்பிரகாசம் 19

சொற்பொருள்:
**எண்ணரிதாய் – எண்ணிலி எண்ணிக்கையில்;
**இருள் மலத்தில் – ஆணவ மலத்தில்;
**யாக்கை – உடல்;
**இருள் மல பாகம் – ஆணவ மலம் நீங்கும் பக்குவ நிலை;
**உள் நிலவும் ஒளி – ஆன்மாவில் அதன் அறிவாக விளங்கும் இறையின் ஞான ஒளி;
**பாதம் உற்றிடும் – இறைவன் திருவடிகளை அடையும்;
**பசு வர்க்கம் – உயிர்கள்.

### “பிறந்த நாள், மேலும் பிறக்கும் நாள் போலும்
துறந்தோர், துறப்போர் தொகை.” ###

இதுவரை முத்தியடைந்த உயிர்களின் எண்ணிக்கை உயிர்கள் பல பிறவிகளில் பிறந்து வாழ்ந்த நாள்களின் மொத்த எண்ணிக்கை போலப் பெரியது. முத்தியடையாத ஆன்மாக்களின் எண்ணிக்கையும் உயிர்கள் இனிப் பிறந்து வாழப்போகும் நாட்களின் மொத்த எண்ணிக்கை போல எண்ணுதற்கு அரியது.
– மெய்கண்ட சாத்திரம், திருவருட்பயன் 11

Note – உயிர் பற்றிய ஏனைய பதிவுகள் (Summary)

01) உயிர் என்றால் என்ன ?
https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid0LUdkkA7nk9EY9rSNQnLsk7YWKMyr5Ncjb8KxPDhyYqJ7b7Uzp9ejEGV4cL55MNJkl?_rdc=1&_rdr

02) புரியட்ட காயம் பற்றியபதிவு https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid02Y71J6QhwzVSrKj5jqYmzkfQ6LHZXkYh6XuqMuRe1QeLogZJ7C6S5f5w31fvB1uTjl?_rdc=1&_rdr

03) #பஞ்சகோசங்கள் , உயிரானது பல்வெறு நிலைகளில் எடுக்கின்ற பல்வேறுவிதமான உடல்கள்…..
https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid02DeCbhFXjL5s33oTfMPpHyRdJrwY6ukPRDSTzTcLE9eZzA2HMTWni87CKWPQAxroAl?_rdc=1&_rdr

04) உயிர்களை கடவுள் ஏன் படைத்தார்?
https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid0BhH8n9g2fXmCHCxXYgAph1nfzoYqLpWXUpni6PiotAQ5RcPEcVZYHquKz7TwNG2Ml?_rdc=1&_rdr

05) கடவுளின் படைப்பின் நோக்கம் என்ன?
https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid02TEUkn7CzJUmDRzzjbmPkJ4Ezb9FQuiUZ5L9rsUoe4eRjikJg5uedXvh5wDCqqvwxl?_rdc=1&_rdr

06) உயிர் மனித உடலிலே எங்கு உள்ளது?
https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid02FBRdSq9bomCMZbVmzbEAVMSKU2ekBcmcmZ5f2t3QfAFbMGw9LDQL69H3M4wsSHFal?_rdc=1&_rdr

07) மனித உடலில் உயிர் அனுபவிக்கும் ஐந்து அவத்தைகள் யாவை?
https://web.facebook.com/Hindu.Saiva/posts/pfbid0vm2JuNDXQX4j5iEbeK27KNHzcMGMycUUDo7RnmPS69JHKhqKVW7TTCvBTR8qSnmPl?_rdc=1&_rdr

Book Reference
www.knowingourroots.com
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).