எளிமையான ஆழமான காலை மாலைப் பிரார்த்தனைகள்.


எளிமையான ஆழமான காலை மாலைப் பிரார்த்தனைகள்.

பிராதக்காலப் பிரார்த்தனம்
(பிராதக்காலம் – விடியற்காலை)

பெருங் கருணைக் கடவுளே!
சென்ற இராத்திரியிலே தேவரீர் அடியேனைக் காத்து அருளினதின் நிமித்தம், தேவரீரை அடியேன் துதிக்கிறேன். இந்தப் பகலிலும் அடியேனைக் காத்து அருளும். அடியேன் பாவங்கள் செய்யா வண்ணம், அடியேனைத் தடுத்து ஆட்கொண்டு அருளும். அடியேன் முன் படித்த பாடங்களும், இனிப் படிக்கும் பாடங் களும், அடியேன் மனசிலே எந்த நாளும் தங்கும்படி அருள் செய்யும்.

சாயங் காலப் பிரார்த்தனம்

மகாதேவரே!
அடியேன் செய்த பாவங்களை எல்லாம் பொறுத்து அருளும்; இந்த இராத்திரியிலே அடியேனைக் காத்து அருளும். அடியேன் தேவரீர் மேல் அன்பு வைத்துத் தேவரீரைத் துதித்து, வணங்கும்படி செய்தருளும். அடியேன், இறக்கும் பொழுது, தேவரீரை மறவாத தியானத்துடனே, தேவரீருடைய பாதத்திலே சேரும்படி அருள் செய்யும்.
ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் அருளியது
பலபாடம் – நான்காம் புத்தகம்