உருத்திராட்ச்ச முகங்களின் எண்ணிக்கை அதிதெய்வங்களும் – பலன்களும்.

உருத்திராட்ச்ச முகங்களின் எண்ணிக்கை
அதிதெய்வங்களும் – பலன்களும்.

*** உருத்திராட்சத்தில் எத்தனை முகமணி முதல் எத்தனை முகமணி வரையும் உண்டு?

ஒருமுக மணி முதற் பதினாறுமுக மணி வரையும் உண்டு.
விளக்கக் குறிப்பு:

• அக்கமணி ஒருமுகம் சிவம், இரண்டு உமை,…………… ………………………………………………………… என உரைத்தாய் சிவசிதம்பரவாச சிவகாமியுமை நேச செகதீச நடராசனே.
1 முக உருத்திராக்கம் – சிவன்;
2 முக உருத்திராக்கம் – உமை
3 முக உருத்திராக்கம் – அங்கி /அக்கினி/ ஆவஹனீயம், கிருஹாபத்யம், தக்ஷணாக்கினி என்னும் முத்தீ
4 முக உருத்திராக்கம் – மறையோன்/பிரம்மா
5 முக உருத்திராக்கம் – உருத்திரன்
6 முக உருத்திராக்கம் – அறுமுகன்/முருகன்
7 முக உருத்திராக்கம் – ஆதிசேடன்
8 முக உருத்திராக்கம் – விநாயகர்
9 முக உருத்திராக்கம் – வடுகன்/வைரவர்
10 முக உருத்திராக்கம் – அரி/விஷ்ணு
11 முக உருத்திராக்கம் – பதினொரு ஏகாதச ருத்திரர்கள்
12 முக உருத்திராக்கம் – பன்னிரு துவாதச ஆதித்தர்கள்
13 முக உருத்திராக்கம் – சேயோன்/முருகன்
14 முக உருத்திராக்கம் – சிவமும் சத்தியும்
15 முக உருத்திராக்கம் – அருவத் திருமேனிகளான விந்து, நாதம்
– சிதம்பரநாத முனிவர் அருளிய நடராச சதகம், பாடல் – 72

• ஏக வக்த்ரம் ………………………………………………………………………………….
ஸர்வ வ்யாதி ஹரஞ்சைவ ஸர்வதாரோக்ய மாப்னுயாத்.
ஒரு முகமுள்ள ருத்திராட்சம் பரதத்துவ ஸ்வரூபம்;
அதை அணிபவன் இந்திரிய ஜயம் பெற்றுப் பரதத்துவதில் லயிப்பான்.
முனி சிரேஷ்டரே! இரண்டு முகமுள்ளது அர்த்த நாரீச்வர ஸ்வரூபம்; அதை அணிபவனிடம் அர்த்தநாரீச்வரர் அருள் எப்பொழுதும் சுரக்கும்.
மூன்று முகமுடையது மூன்று அக்னிகளின் ஸ்வரூபம்;
அதை அணிந்தால் அக்னிதேவருடைய அருள் கிட்டும்.
நான்கு முகமுடையது நான்முக பிரம்மாவின் வடிவம்;
அதை அணிந்தால் பிரம்மா பிரீதியடைவார்.
ஐந்துமுக ருத்ராட்சம் பஞ்சப்பிரம்ம ஸ்வரூபம்;
அது பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கும்.

ஆறுமுக ருத்ராட்சம் கார்திகேயரை அதிதெய்வமாகவுடையது; அதை அணிவதால் பெருஞ் செல்வமும், சிறந்த ஆரோக்கியமும் ஏற்படும்.
நல்ல புத்தி, சிறந்த ஞானம், ஸம்பத்து, தூய்மை அனைத்திற்கும் இடம்; புத்திமான் அதனைத் தரிக்க வேண்டும்; விநாயகர் முதலிய தெய்வங்களும் அருள் புரியும் என்று அறிவாளிகள் கூறுகிறார்கள்.

ஏழு முக ருத்ராட்சம் ஸப்தமாதாக்களை அதிதெய்வமாகக் கொண்டது; அதை எப்பொழுதும் தரிப்பதால் செல்வப் பெருக்கு, உத்தம உடல் நலம்,
சிறந்த ஞான சம்பத்து எல்லாம் உண்டாகும்.

எட்டு முக ருத்ராட்சம் எட்டு மாத்ருகா தேவிகளின் உறைவிடம்; அதை அணிபவர்கள் ஸத்தியவாதிகளாகவும், அஷ்ட மாதாக்களின் ப்ரீதியையும் அஷ்டவசுக்களின் ப்ரீதியையும்
கங்கா தேவியின் அருளையும் பெறுபவராவார்.

ஒன்பது முக ருத்ராட்சம் நவசக்திகளின் உறைவிடம்;
அதை அணிவதால் நவசக்திகளின் அருள் ஏற்படும்.

பத்து முகமுடையது யமனை தேவதையாக உடையது;
அதை அணிவதால் நவக்கிரக தசைகளின் சாந்தி ஏற்படும், சந்தேகமில்லை.

பதினொரு முகம் கொண்டது ஏகாதச ருத்ரர்களை தெய்வமாக உடையது; அது எப்பொழுதும் ஸௌபாக்கியத்தை வளர்க்கும் என்று கூறுவர்.

பன்னிரண்டு முகமுள்ள ருத்ராட்சம் மஹாவிஷ்ணு ஸ்வரூபம்; பன்னிரண்டு ஆதித்யர்களையும் தன்னுள் கொண்டது.

பதின்மூன்று முகமுடையது விரும்பிய சுப சித்தியை அளிப்பது; அதை அணிவதால் காமதேவன் அருள் கிட்டும்.

ருத்ர நேத்திரத்திலிருந்து தோன்றிய பதினான்கு முக ருத்ராட்சம் எல்லா வியாதிகளையும் போக்கி எப்பொழுதும் ஆரோக்கியத்தைத் தோற்றுவிக்கும்.
– சாம வேதம், ருத்ராட்ச ஜாபால உபநிடதம்
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).