கர்மா கழியும் வழி

எமது கர்மாவை நாமே சுமந்து நாமே புசித்து நாமே கழிக்க வேண்டும் என்பதுன் பொது விதி. ஆயினும்…
01) முத்தி நிலையில் குருவருளால் இருவினையொப்பு வர #ஆகாமிய_கர்மம் ஏறாது.
முத்திநிலையில் ஞானிகள் அல்லது ஜீவன் முத்தர்கள் செய்யும் நல்வினை அவர்களுக்கு நன்மை செய்பவர்களைப் போய்ச் சேரும். அதுபோல் அவர்கள் செய்யும் தீவினை அவர்களுக்குத் தீமை செய்பவர் பால் போய்ச்சேரும்.
02) #சஞ்சித_கர்மம் இறையின் திருவருளால் அழியும்.
03) கொண்டு வந்த #பிராரப்த_கர்மம் அனுபவித்தே கழிக்கவேண்டும்.
இதனாலேயே இராமகிருஷ்ணர், இரமணர், யோகர் சுவாமிகள் போன்ற ஞானிகளும் மூப்பு, நோய் போன்ற உடல் உபாதைகளுக்கு ஆளானார்கள். சிலர், இது அவர்கள் அவர்களை வழிபடுபவர்களின் கர்மபலனை ஏற்றதனாலேயே இவ்வாறு உபாதைகள் வந்தன என்று கூறுவது தவறு.
விரிந்த சஞ்சித வினைகள் அன்புடன் நாம் விழிக்க வெந்தன,
விரவுமிப் பிறப்பில் பொருந்தும் வல்வினை உடலுடன் அகலும்,
புந்திசேர் அருள் வருவினை போக்கும், அருந்துயர்ப் பொருள் உயிர் உடம்புனதே யல்ல நம்மனவாகும்,
இங்குனைப்போல் இருந்த நங்குரு வடிவைநின் கருத்தில் இருத்துவாய், பொருளிது வென மொழிந்தார்.
– திருவாதவூரடிகள் புராணம்.
இவனுலகில் இதமகிதம் செய்த வெல்லாம்,
இதமகிதம் இவனுக்குச் செய்தார்பால் இசையும்,
அவனிவனாய் நின்றமுறை ஏக னாகி
அரன்பணியின் நின்றிடவும் அகலுங் குற்றம்,
சிவனும்இவன் செய்தியெலாம் என்செய்தி யென்றும்,
செய்ததெனக் கிவனுக்குச் செய்த தென்றும்,
பவமகல உடனாகி நின்றுகொள்வன் பரிவாற், பாதகத்தைச் செய்திடினும் பணியாக்கி விடுமே.
– சிவஞானசித்தியார் 304
கர்மத் தேட்டம் Link…
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *