கர்மா பதிவுகள் தொகுப்பு

கர்மா_பதிவுகள்_தொகுப்பு

 

கர்மா என்பது என்ன ?

 

கர்மா எவ்வெவ் வழிகளில் நம்மை அடைகின்றது?

 

நாம் ஈட்டிய கர்மா மூன்று வழிகளில் எம்மை வந்தடைந்து எமக்குப் பயன் தருகின்றது.

 

மற்ற மனிதர்கள், மற்ற உயிர்களினூடாக வருகின்ற இன்ப துன்பங்கள்.
தன்னால், பிறரால், தனக்கு வரும் தீங்கு நலம்
இன்னா விலங்கு, அரவம், தேள், எறும்பு- செல்.முதல் நீர்
அட்டை, அலவன், முதலை, மீன், அரவம் ஆதியினாம்
கட்டமும் இங்கு ஆன்மிகமே காண்.
– காழி மறைஞான தேசிகர் அருளிய
சிவதருமோத்தர ஆகம உரையில் உள்ள மேற்கோள் பாடல்.

 

காற்று, மழை, தீ, நிலம் போன்ற இயற்கையினால் வருகின்ற இன்ப துன்பங்கள்.
பனியால் இடியால் படர் வாடையி னாலும்
துனி தென்றலினால் சுகமும் – தனையனைய
நீரினாம் இன்பு இன்னலும் நெருப்பினாம் துயர் இன்பு
ஓரில் பவிதிகம் ஆகும்
– காழி மறைஞான தேசிகர் அருளிய
சிவதருமோத்தர ஆகம உரையில் உள்ள மேற்கோள் பாடல்.

 

தெய்வத்தினால் வருகின்ற இன்ப துன்பங்கள்.
கருவில் துயர், செனிக்கும் காலைத் துயர், மெய்
திரை நரை மூப்பில் திளைத்துச் செத்து – நரகத்தில்
ஆழுந் துயர், புவியை ஆள் இன்பம் ஆதி யெலாம்
ஊழ் உதவும் தைவீகம் என்று ஓர்.
– காழி மறைஞான தேசிகர் அருளிய
சிவதருமோத்தர ஆகம உரையில் உள்ள மேற்கோள் பாடல்.

 

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).