சைவத்தில் கூறப்பட்ட பிறந்தநாள் வழிபாடும் கிரக பீடைகளுக்கான பரிகாரமும் .

சைவத்தில் கூறப்பட்ட பிறந்தநாள் வழிபாடும்
கிரக பீடைகளுக்கான பரிகாரமும் .
*** சென்மத்திரயங்களாவன பிறந்த நட்சத்திரமும் அதற்குப் பத்தாம் நட்சத்திரமும், அதற்குப் பத்தா நட்சத்திரமுமாம்.
228. சிவலிங்கப் பெருமானுக்கு விசேடபூசை செய்யத்தக்க காலங்கள் எவை?
பஞ்சாட்சரவியலிலே சொல்லப்பட்டவை முதலிய புண்ணிய காலங்களும், சென்மத்திரயங்களுமாம். இன்னும் மார்கழி மாசம் முழுதிலும் நாள் தோறும் நித்திய பூசையே அன்றி அதற்குமுன் உஷத்கால பூசையும் பண்ணல் வேண்டும். சிவராத்திரி தினத்திலே பகலில் நித்திய பூசையே அன்றி இராத்திரியில் நான்கு யாம பூசையும் பண்ணல் வேண்டும்.
229. சென்மத்திரய பூசையால் வரும் விசேட பலம் என்னை?
சென்மத்திரயம் தோறும் சிவலிங்கப்பெருமானுக்குப் பதமந்திரம் கொண்டு பாலினாலும் சர்க்கரையினாலும் விசேடமாக அபிசேகம் செய்து, சுகந்தத் திரவியங்கள் கலந்த சந்தனக் குழம்பு சாத்திப் பாயசம் முதலியன நிவேதனம் செய்துகொண்டுவரின், உற்பாதங்களும், பயங்கரமாகிய கிரக பீடைகளும், சகல வியாதிகளும் நீங்கும்.
விளக்கக் குறிப்பு:
தவச்ரியே மருதோ மர்ஜயந்தே
ருத்ரயத்தே ஜநிம சாரு சித்ரம்
பதம்யத் விஷ்ணோ ருபமந்ய தாயிதே ந
பாஸி குஹ்யம் நாமகோநாம்
தேவர் எல்லோரும் சிவலிங்க ஆராதனையால்
எல்லா ஐசுவரியமும் எய்தினர்.
இலக்குமியோடு கூடிய விஷ்ணுவும்
பரமபத வாழ்வடைந்தார்.
– இருக்கு வேதம்
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).