மனித உடலிலே கடவுள் எங்கே இருகின்றார்? – Part 01
• ………உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம்
நிரை சேரப் படைத்து அவற்றின் உயிக்கு உயிராய் ஆங்காங்கே நின்றான்…………..
கடவுள் உயிருக்கு உயிராக, உயிரின் எசமானாக, உயிரின் தலைவனாக ஒவ்வொரு உயிரிலும் உறைகின்றான்.
– 1ம் திருமுறை, சம்பந்தர் தேவாரம்
மூவகை ஆகாசங்கள்:
1. சட ஆகாசம்:
இது இந்த பிரபஞ்சத்தின் அண்டத்தொகுதிகளின் ஆகாசம் ஆகும். சட உலகின் பகுதியாகவும், மூலமாகவும் உள்ள இந்த ஆகாசமும் அறிவும், உணர்வும் அற்ற சடமே. ஆதலால் இதனைச் சட ஆகாசம் என்பர். இது பேரம்பலம் எனவும் கூறப்படும். இதன் சக்தி அறிவும், உணர்வும் அற்ற சட சக்தியாகும்.
இவை பற்றிய ஆராய்ச்சியே அணு விஞ்ஞானமும், அண்டவியல் விஞ்ஞானமும் ஆகும். எங்கும் நீக்கமற நிறைந்துள்ள இறைவன் இங்கும் நின்று உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களை ஆற்றும் நடனம் தூல நடனம் எனப்படுகின்றது.
•” தோற்றம் துடியதனில்………………………………
…………………………….நான்ற மலப்பதத்தே நாடு.”
நடராசரின் உடுக்கை படைத்தலையும்,
அபய கரம் காத்தலையும், கையில் ஏந்திய அக்கினி அழித்தலையும், ஊன்றிய திருவடி மறைத்தலையும்,
தூக்கிய திருவடி அருளலையும் குறிக்கின்றது.
– மெய்கண்ட சாத்திரம், உண்மை விளக்கம் -35
• ஆகாசத்தினின்றே எல்லாப் பொருள்களும் உண்டாகின்றன; ஆகவே முடியும்போது ஆகாசத்திலேயன்றோ புகுகின்றன. ஆகாசமே இவைகளுக்கெல்லாம் பெரியது, ஆகாசமே முடிவான உறைவிடம்.
– சாம வேதம், சாந்தோக்கிய உபநிடதம் 1.9.1-2
• “இருநிலனது புனலிடை ……………………
…………………………………… மறைவன மமர்தரு பரமனே.”
பேரூழிக்காலத்தில் பெரிய இந்நிலமாகிய மண் புனலில் ஒடுங்க, நீர் எரியில் ஒடுங்க, எரி வளியில் ஒடுங்க, வளி ஆகாயத்தில் ஒடுங்க, பரந்துபட்ட இவ்வுலகமும் உலகப் பொருள்களும் ஆகிய அனைத்தும் அழிய, அதுபோது பிரம விட்டுணுக்களது முழு எலும்புக் கூட்டை அணிந்து, தான் ஒருவனே தலைவன் எனத் திரியும் அழகுடையவன், வண்ண மலர்க் கூட்டங்களில் வண்டுகள் இசை முரலும் மறைவனம் அமரும் பரமன் ஆவான்.
– 1ம் திருமுறை, திருஞானசம்பந்தர் தேவாரம்
2. சிதாகாசம்: ………Part 2
3. பராகாசம்:………. Part 3
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).