சைவத்தின் அண்டவியல் விஞ்ஞானம் – Part – 03 Hindu Cosmology and Science – Part – 03

சைவத்தின் அண்டவியல் விஞ்ஞானம் – Part – 03
Hindu Cosmology and Science – Part – 03

 

………………………………………………………………………………………………………
*** மூவகை உலகங்கள் (சுத்த, அசுத்த, பிரகிருதி மாயா உலகங்கள்)
*** 224 புவனங்கள் (சுத்த, அசுத்த, பிரகிருதி மாயா உலகங்கள்)
*** பிரம்மாண்டம் (6 அண்டத்தொகுதிகள் , 14 உலகங்கள் )
………………………………………………………………………………………………………….

 

A. பிரகிருதி மாயா உலகங்கள் (Observable universes) :

இங்கு மேலுலகங்கள் ஏழு, கீழுலகங்கள் ஏழு என ஈரேழு பதினான்கு லோகங்களும் உள்ளன எனச் சைவம் கூறுகின்றது. இவையாவன,

மேலுலகங்கள் ஏழு:

1. நாம் வாழும் பூவுலகம் என்னும் பால்வீதி அண்டத் தொகுதி, (Milkyway galaxies)

2. அதற்கடுத்த புவர்லோகம்,
3. சுவர்க்கம் என்னும் அதற்கடுத்த சுவர்லோகம்,
4. அதற்கடுத்த மஹர்லோகம்,
5. பித்ருக்கள் வாழும் அதற்கடுத்த ஜனலோகம்,
6. அதற்கடுத்த தபலோகம்,
7. பிரம்மா வதியும் சத்திய லோகம்
என்னும் ஏழுலகங்களும் மேலுலகங்களாம்.
• உலகேழும் பெற்ற சீர் அபிராமி
– அபிராமி அந்தாதி

 

கீழுலகங்கள் ஏழு:

 

1. அதலம்,
2. விதலம்,
3. சுதலம்,
4. தலாதலம்,
5. ரஸாதலம்,
6. மஹாதலம்,
7. பாதாளம்

 

என்னும் எழுலகங்களும் ஒன்றையொன்று அடுத்துள்ள கீழுலகங்களாம். அதல பாதாளம் என்ற பேச்சு வழக்கை அவதானித்தால் இது புரியும். மேலுலகங்கள் ஏழு, கீழுலகங்கள் ஏழு என மொத்தமாக இந்த ஈரேழு பதினான்கு உலகங்கள் நமது பூலோகத்தின் அயற் புவனங்கள்.

 

“பூத்தவளே! புவனம் பதினான்கையும் பூத்த வண்ணம் காத்தவளே! பின் கரந்தவளே!”
– அபிராமி அந்தாதி – 13

 

“கிண்கிணி யோசை பதினாலு உலகமுங் கேட்டதுவே”
– கந்தர் அலங்காரம் – 93

 

“புவர்லோகத்தின் நலத்தகைய தொகை பதினைந் திலக்க மாகும்”
– கந்த புராணம் -785

 

சொற்பொருள்: இலக்கம் – இலட்சம்.

 

“தொகலோடு சேர்தருமிப் பதத்தின் மீதிற்
சுவர்லோகம் எண்பத்தஞ் சிலக்க மாங்கே
புகலோடு வானவரும் பிறரும் போற்றப்
புரந்தரன் வீற்றிருந்தரசு புரிவன் அப்பால் மகலோகம் இருகோடி மார்க்கண்டாதி மாமுனிவர் பலர் செறிவர் மற்ற தன்மேல் இகலோகம் பரவு சனலோகம் எல்லை எண்கோடி பிதிர்தேவர் இருப்பர் அங்கண்.”
– கந்த புராணம் – 786

 

சொற்பொருள்: புரந்தரன் – இந்திரன்

 

“தவலோகம் உன்னத மீராறு கோடி
சனகர் முதலாவுடைய வனகர் சேர்வர்
அவண்மேற் சத்தியவுலகம் ஈரெண் கோடி
அயன் இன்பத்தலம் உலகமளிக்குந் தானம்
நவைதீரும் பிரமபதம் மூன்று கோடி
நாரணர் வாழ் பேருலகம் ஓர் முக்கோடி
சிவலோகம் நாற்கோடி அதற்கு மீதே
திகழண்ட கோளகையுங் கோடியாமே
– கந்த புராணம் – 787

 

வைகுந்தம்:

 

விஷ்ணு வதியும் விஷ்ணுலோகம் இந்த ஏழுலகங்களுக்கும் அதற்கு மேல் உள்ளது. நாராயணரின் வைகுந்தம் மற்றும் கிருஷ்ணர் வதியும் கோலோகம் என்பன இங்கு உள்ளன.

 

சிவலோகம்:

 

வைகுந்தத்துக்கு மேல் உள்ள உலகம் காலருத்திரன் வதியும் சிவலோகம்.

 

பிரம்மாண்டம்:

 

இந்த உலகங்கள் யாவும் ஆடகேசுர புவனம், கூஷ்மாண்ட புவனம், காலாக்னிருத்திர புவனம், பிரம்ம லோகம், விஷ்ணுலோகம், சிவலோகம் என்னும் ஆறு அண்டத்தொகுதிகளுக்குள் அடங்குவன. கூஷ்மாண்ட புவனத்துக்கும் காலாக்னிருத்திர புவனத்துக்கும் இடையில் 28 கோடி நரகலோகங்கள் உள்ளன.

 

“துன்னுறு நாலேழ் கோடி தொகைப்படு நிரயத்து எல்லை”
– கந்த புராணம் – 734

 

சொற்பொருள்:

 

நாலேழ் – இருபத்தெட்டு;
நிரயம் – நரகம்.

 

இந்த ஆறு அண்டத்தொகுதிகளும், அவற்றின் புவனங்களும், அவற்றிலுள்ள உலகங்களும் பிரம்மாவினால் நேரடியாகப் படைக்கப்படுவதனால் பிரம்மாண்டம் என்று அழைக்கப்படுகின்றன.

 

நூற்றெட்டு புவனங்கள்:

 

இந்த ஆறு அண்டங்கள் உள்ளிட்ட 108 புவனங்கள் நிவிருத்தி கலை புவனங்கள் ஆகும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உருத்திரரின் ஆதிக்கத்தில் உள்ளன.

 

“இவ் வண்டத்தில் புவன நூற்றெட்டு
இறையருள்சேர் உருத்திரர் தம் இருக்கையாமே”
– கந்த புராணம் -789

 

பிரதிட்டா கலை புவனங்கள்:

 

இவற்றுக்கும் அப்பால் பிரதிட்டா கலை புவனங்கள் 56 உள்ளன.

 

இந்த நிவிருத்தி கலை புவனங்கள் 108ம் பிரதிட்டா கலை புவனங்கள் 56ம் சேர்ந்து மொத்தமாக 164 புவனங்கள் யாவும் பிரகிருதி மாயையினால் ஆன உலகங்கள் ஆகும்.

 

இந்த பிரகிருதி மாயா உலகங்களே ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று மலங்களும் உடைய உயிர்களுக்கு உலகம் ஆகும்.

 

இவ்வுலகங்களில் பிரகிருதி மாயையின் இயல்புகளான இரஜோ, தமோ, சத்துவ குணங்கள் என்னும் முக்குண தோஷம் சகலத்துக்கும் உண்டு. உணவு, மனிதர், மிருகங்கள், தாவரங்கள், மும்மூர்த்திகள், தேவர்கள் யாவரும், யாவையும் பிரகிருதி மாயா உலகின் முக்குண தோஷங்களுக்கு உட்பட்டவையே.
இதனால் இங்குள்ள மும்மூர்த்திகளான பிரம்ம, விஷ்ணு, உருத்திரர்களை குணிப் பிரம்மா, குணி விஷ்ணு, குணி உருத்திரன் என்று சைவம் கூறுகின்றது.
“மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்”
– 8ம் திருமுறை

 

“மூவர்க்கு அருள் செய்ய வல்லானே”
– 7ம் திருமுறை

 

“மூவரின் முதல்வனாய் நின்றவன்”
– 3ம் திருமுறை

 

இவர்கள் யாவரையும் செலுத்துவது இவற்றுக்கு அப்பாற்பட்ட அசுத்த மாயா உலகில் உள்ள ஸ்ரீகண்ட ருத்திரர் ஆவார். இவர் ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மாத்திரம் உடைய பிரளயாகல ஆன்மாக்களில் உயர்ந்தவர். இவருக்கு மாயா மலம் இல்லாததால் அதன் இயல்பாகிய முக்குணங்களின் தோஷங்கள் இல்லாதவர்.

 

B. அசுத்த மாயா உலகங்கள்: unobservable universes

 

அசுத்த மாயா உலகில் 27 புவனங்கள் உள்ளன. இவை வித்தியா கலை புவனங்கள் ஆகும். இங்கே உள்ள புவனங்கள் ஒன்றிலே ஸ்ரீகண்டருத்திரர் உறைகின்றார். இந்த உலகங்களிலே ஆணவம், கன்மம் என்னும் இரு மலங்கள் மாத்திரம் உடைய உயிர்கள் வாழ்கின்றன.

 

சைவர்கள் தியானிக்கும் சிவன் ஸ்ரீகண்டருத்திரரே. தியானத்தில் அமர்ந்திருக்கும் சிவ மூர்த்தமும் ஸ்ரீகண்டருத்திரரே. இவர் இங்குள்ள கைலாசத்தில் தமது சக்தியாகிய உமையுடன் உறைகின்றார். இவரே சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் ஆகிய நான்கு ரிஷிகளுக்கும், நந்தி தேவருக்கும் உபதேசித்த சிவன். நமது புராணங்களில் உள்ள பராக்கிரமங்களின் கதாநாயகன் இவரே. நாயன்மார்களுக்கு அருள் செய்த சிவன் இவரே. இவர் எல்லா உருத்திரர்களையும் போல சிவ வடிவம் பெற்ற மேலான ஆன்மாவே. இவரைச் செலுத்துவது சுத்த மாயா உலகில் உள்ள அனந்தேசுவரர்.

 

“பொன் திகழ் சடிலத்து அண்ணல் தன் பெயரும், பொருவிலா உருவமும், தொன்னாள் நன்று பெற்றுடைய உருத்திர கணத்தோர்”
– கந்த புராணம் – 1302

 

C. சுத்த மாயா உலகங்கள்: Beyond unobservable universes

 

சுத்த மாயா உலகில் சாந்தி கலை புவனங்கள் 18ம், சாந்தியதீத கலை புவனங்கள் 15ம் ஆக மொத்தம் 33 புவனங்கள் உள்ளன. இது தான் ஆணவம் என்னும் ஒரு மலம் மட்டுமேயுள்ள உயிர்களுக்கு இருப்பிடம். இங்கே உள்ள புவனங்களில் ஒன்றிலேதான் அனந்தேசுவரர் உறைகின்றார். இவரே ஸ்ரீகண்டருத்திரரைச் செயற்படுத்துபவர். ஸ்ரீகண்டருத்திரரின் உபதேச குருவும் இவரே.
இப்படி எமது புவி சார்ந்த அண்டத்தொகுதியில் மாத்திரம் 224 புவனங்கள் உள்ளன. இது போல் ஆயிரங் கோடிக் கணக்கில் பல அண்டத்தொகுதிகள் உள்ளன என்று இன்று விஞ்ஞானம் சொல்வதைச் சைவம் அன்றே சொல்லியுள்ளது.

 

பெருநாத வெடிப்பாக -BIG BANG – வெடித்துச் சிதறித் தோன்றும் எண்ணற்ற இந்த அண்டத் தொகுதிகள் யாவும் விரிவடைந்து கொண்டே இருக்கின்றன – EAPANDING UNIVERSE – என்று இன்றைய விஞ்ஞானி ஸ்டீபன் ஹோக்கிங் – STEPHEN HAWKING – சொன்னதை அன்றே “நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன” என்று கூறியது சைவம்.

 

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).
See Translation
May be an image of text that says "பிரமாண்டம் PRAMAANDAM கீழுலகங்கள் மேலுலகங்கள் 4. 5. 6. பூலோகம் ஆகாசம் ஆட கேசுர புவனம் கனிஷ்ட பாதாளம் பாதாள உலகங்கள் 7 ஆகாசம் 2. கூஷ்மாண்ட ஆகாசம் நரகலோகங்கள் -28 ஆகாசம் 3. காலாக்னி ருத்ர புவனம் பிரமாண்டத்தின் கீழ் எல்லை புவனம் பிரமாண்ட த்தின் மேலெல்லை சிவ (உருத்திர) லோகம் விஷ்ணு லோகம் பிரம்ம லோகம் சத்தியலோகம் தபலோகம் ஜனலோகம் மஹர்லோகம் சுவர்(க்க) லோகம் புவர்லோகம் லோகம்"