கர்மா அல்லது கன்மம் என்பது என்ன?

கர்மா அல்லது கன்மம் என்பது என்ன?

(படம் – ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமனும் எதிரானதுமான மறுதாக்கம் உண்டு. நியூட்டனின் 3ம் விதி..)
இது கிரு – என்ற வடமொழி வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. கிரு என்றால் செய்தல் என்று பொருள். கர்மா என்பது செயல். கர்மா என்பது செய்யும் தொழிலையும் குறிக்கும். இந்த வேர்ச்சொல்லில் இருந்தே கரம் என்ற சொல் கையுக்கு வந்தது. கறா, கறண்ட, கறாத, கறண்டத போன்ற சிங்கள மொழிச்சொற்களுக்கும் அடிப்படை இதுவே. நாம் செய்யும் செயல்கள் யாவும் கர்மா எனப்படும்.

சமய ரீதியில் நான் செய்கிறேன் என்ற உரிமையுடன், அகந்தையுடன் செய்யும் செயல்களே கர்மா எனப்படும். நாம் பல பிறவிகளில் செய்யும் செயல்களினால் வருகின்ற கர்ம அனுபவத்தினால் எமது ஆன்ம அறிவு வளருகின்றது. ஆனால் இவ்வாறு பிறவிகள் தோறும் பெறும் படிமுறை அறிவும் ஓரளவுக்கு உதவினாலும் இதனால் இந்த கொடிய இருளாகிய ஆணவத்தின் மறைப்பை முழுமையாக அகற்ற முடியாது.

கர்ம ஈட்டம்;

மனம், வாக்கு, காயம் (Thoughts, words and deeds) என்னும் மூன்றினாலும் கர்மாவை ஈட்டிச் சேர்க்கின்றோம்.
நாம் செய்யும் செயல்கள் யாவுமே கர்மா என்று சைவம் கூறுகின்றதா ?

* கர்த்திருத்துவம்.

உயிர் மலங்களில் கட்டுண்ட நிலையில் செயல்கள் யாவும் தற்போதமாகவே செய்கின்றதால் நல்வினையும் தீவினையும் உயிரை சேர்கின்றன. நானே செய்கின்றேன் என்றும் நானே இந்த செயலுக்கு கருத்தா என்ற தன்முனைப்புடன் செய்வது – கர்த்திருத்துவம் – இந்நிலையில் ஆன்மாவை நல்வினை தீவினைகள் சேரும்.

* போத்திருத்துவம்.

முக்திநிலையில் தற்போதம் நீங்கி சிவபோதமாக செயல்கள் அமைவதால் உயிரை நல்வினை தீவினைகள் சேர்வதில்லை. எல்லாம் இறைவன் செயல்களாகவே, தன்முனைப்பு சிறிதும் இல்லாமல் செய்யப்படும் செயல்கள் – போத்திருத்துவம் – இந்நிலையில் ஆன்மாவை நல்வினையும் தீவினையும் சேராது.
கன்மமாவன யாது? (- ஆறுமுகநாவலர்)

ஆன்மாக்கள் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலே செய்த புண்ணிய பாவங்கள். இவை, எடுத்த பிறப்பிலே செய்யப்பட்ட பொழுது, ஆகாமியம் எனப் பெயர் பெறும். பிறவி தோறும் இப்படி ஈட்டப் பட்டுப் பக்குவப்படும் வரையும் புத்தி தத்துவம் பற்றுக்கோடாக மாயையிலே கிடக்கும் பொழுது சஞ்சிதம் எனப் பெயர் பெறும். இச் சஞ்சித கன்மங்களுள்ளே பக்குவப்பட்டவை, மேல் எடுக்கும் உடம்பையும் அது கொண்டு அநுபவிக்கப்படும் இன்ப துன்பங்களையும் தந்து பயன்படும் பொழுது, பிராரத்தம் எனப் பெயர் பெறும்.

கர்மத் தேட்டம்: கர்மாவின் வகைகள் ;

https://www.facebook.com/Hindu.Saiva/posts/139249832551266
கர்மா எவ்வெவ் வழிகளில் நம்மை அடைகின்றது?
https://www.facebook.com/Hindu.Saiva/posts/140938159049100
கர்மா கழியும் வழி:
https://www.facebook.com/Hindu.Saiva/posts/140595585750024
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).